மாதவிடாய் நேரத்தில் அதிக இரத்த போக்கு ஏற்படுகிறதா? - அப்போ இந்த பானத்தை குடிங்க
பொதுவாகவே பெண்களுக்கு மாதவிடாய் என்பது மாதம் மாதம் ஏற்படும் ஒரு பிரச்சினையாகும். இந்த சூழ்நிலையில் ஒரு சில பெண்களுக்கு இரத்தப்போக்கானது அதிகமாக ஏற்படும்.
இந்த அதீத ரத்தப்போக்கானது பல்வேறு உடல்நல பிரச்னைகளின் அறிகுறியாக இருக்கலாம்.
அதிக மாதவிடாய் இரத்தப்போக்கு ஒரு பொதுவான பிரச்சினையாகும். ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு போதுமான இரத்த இழப்பு இல்லை என்றால் இது ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த வகை இரத்தப்போக்கு அசாதாரண கருப்பை இரத்தப்போக்கு அல்லது ஒழுங்கற்ற மாதவிடாய் இரத்தப்போக்கு என்று அழைக்கப்படுகிறது.
அதிக மாதவிடாய் இரத்தப்போக்கானது தினசரி வேலையை சரிவர செய்வதற்கு தடையாக இருகிறது எனலாம். எனவே இதை தடுப்பதற்கு என்ன செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
அரிசி நீர்
முதலில் 10 கிராம் அரிசியை 60 - 80 மில்லி தண்ணீரில் ஊற வைக்கவும். பின் அதை 2 முதல் 6 மணித்தியாலத்திற்கு ஊற வைக்கவும். அதில் மாவு சத்தானது பிரித்தெடுந்தவுடன் 2-3 நிமிடங்கள் அரிசியை கழுவவும். இறுதியாக அரிசி வடக்கட்டிய தண்ணீரை நாள் முழுவதும் குடிக்கவும்.
பெருஞ்சீரகம் நீர்
ஒரு கப் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் பெருஞ்சீரகம் மற்றும் கல் ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும். அடுத்து அதை கலந்து குடித்து வரலாம்.
கருப்பு திராட்சை தண்ணீர்
ஒரு கைப்படி திராட்சையை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து, காலையில் அரைத்து குடிக்கலாம்.
மேலும் இரும்பு சத்து நிறைந்த காய்கறிகள், தானியங்கள் மற்றும் பழங்கள் என அவற்றை உட்க்கொள்ளலாம். புரத சத்து நிறைந்த மீன்களையும் எடுத்துக்கொள்வது நல்லது.
இந்த பிரச்சினையானது தீவிரமாகியது என்று தெரிந்தால் உடனே வைத்தியரை நாடி பரிசோதிப்பது சிறந்ததாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |