நுரையீரல் அழற்சி : அலட்சியமா மட்டும் இருக்காதீங்க... உயிருக்கே ஆபத்து!
நிமோணியா என்பது மூச்சுச்சிற்றறையில் திரவ உற்பத்தியை ஏற்படுத்தி சுவாச பிரச்சனை உண்டாக்கும் ஒரு தொற்றுநோயாகும். நிமோணியாவின் அநேக நிலைமைகள் வைரஸ்களால் உண்டாகின்றன.
நிமோணியா காய்ச்சல் நிலமைகள் பக்டீரியாவினால் உண்டாகிறன. பெரும்பாலும், தடிமனை வைத்து தான் ஏற்படும்.
இது கடுமையானால் உயிர் இழப்புகளும் ஏற்படும். அந்த நோய் முன்னரே ஏற்பட்டால் வரும் அறிகுறிகள் பற்றி இந்த பதிவில் விரிவாக தெரிந்துக்கொள்வோம்.
நிமோனியா காய்ச்சலின் அறிகுறிகள்
-
கடும் காய்ச்சல்
- இருமல்
-
சுவாசிப்பதில் விரைவு
- சுவாசிப்பதில் சிரமம்
- நுரையீரலில் பட்டாசுவெடிப்பதைப் போன்ற சப்தம்
- பசியின்மை
- இருமலினாலோ அல்லது சளியை விழுங்கும்போதோ வாந்தி எடுத்தல்
- நோயுற்றவராகவும் நிலைகுலைந்தவராகவும் உணருதல்
- அடிவயிற்றில் வலி
இது ஏற்படுவதற்கான முக்கிய காரணம்
சுற்றுச்சூழலில் இருக்கும் ஒரு சில பொருட்கள் காரணமாக இந்த பாதிப்பு ஏற்படுகின்றது. அதாவது குறிப்பிட்ட ஒரு சில பொருட்கள் உட்படும் போது வீக்கபம் ஏற்பட்டு நுரையீரல் அழற்சி ஏற்படுகின்றது.
- புரதம்
இரசாயனங்கள்
- வைக்கோல்
- விலங்குகளுக்கான உணவு
- விலங்கின் மென் மயிர்
-
பறவைகளின் இறக்கை அல்லது எச்சம்
- மரத் துகள்கள்
வைத்தியம்
- ஆப்பிள் சீடர் வினிகர், தேன் மற்றும் சூடான நீர் சேர்த்து கலந்து, தினமும் குடிக்கவும்.
- பூண்டு பற்களை மென்று சாப்பிடலாம். அல்லது பூண்டை நசுக்கி அந்த பேஸ்ட்டை உங்கள் மார்பில் தடவி விடவும்.
- புதினா எண்ணெய் மற்றும் கேரியர் எண்ணெய் கலந்து இதை மார்பு மற்றும் முதுகில் தடவி விடவும். இதை தினமும் இரண்டு முறை செய்து வந்தால் போதும்.
- ஒரு டம்ளர் சூடான பாலில் மஞ்சள் பொடியை கலந்து குடிக்கவும். தினமும் ஒரு வேளை இதை குடித்தால் போதும்.
- துளசி இலைகளை வாயில் இட்டு மென்று சாப்பிடுங்கள். தினமும் இதை 2 அல்லது மூன்று முறை மென்று சாப்பிடுங்கள்.
- தண்னீரில் தேன் கலந்து தினமும் குடிக்கலாம். தினமும் பல முறை இதை குடித்து வரலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |