தலையெல்லாம் வெள்ளை முடி நிறைந்து விட்டதா? அப்போ இதை மட்டும் செய்தால் போதும்
Hair Growth
By Kirthiga
தற்போது எல்லாம் அனைவருக்கும் இளம் வயதிலேயே நரைமுடி வந்துவிடுகிறது.
இதற்கு காரணம் என்னவென்று பார்த்தால் உணவுப்பழக்கம், மனஅழுத்தம் மற்றும் பரம்பரை என்று இருக்கலாம்.
ஆனால் அதற்கு சரியான முடி பராமரிப்பும் இருக்க வேண்டும்.
அதிலும் பலர் தனது நரை முடி மறைக்க ஹேர் டைகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். இது பலருக்கு முடி வளர்ச்சியை குறைக்கும்.
ஆகவே வீட்டில் இருந்தே எவ்வாறு சில பொருட்களைக் கொண்டு முடியை கருமையாக செய்யலாம் என்று பார்க்கலாம்.
ஹேர்பெக்
-
மருதாணி பவுடர் - 02 தே.கரண்டி மற்றும் அவுரி இலை - 05 தே.கரண்டி சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.
-
பின் அதனுடன் வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி கலந்து எடுக்க வேண்டும்.
-
இதை செய்து 50 நிமிடங்களாவது மூடி வைத்தல் நல்லது.
-
அதன் பின் தலையில் பூசி குளித்து வந்தால் முடி கருமையாகும்.
- பூசிய பின் ஒரு 1மணிநேரம் தலையில் ஊறவிட்டு கழுவுதல் சிறப்பாக இருக்கும்.
- குறிப்பாக இதை செய்தால் 3 நாட்களுக்கு பின் தலையில் எண்ணெய் வைக்க கூடாது.
வீட்டில் செய்யும் எண்ணெய்
-
தேங்காய் எண்ணெய் 250 மில்லி, ஆமணக்கு எண்ணெய் 25 மில்லி, கறிவேப்பிலை கையளவு, எலுமிச்சை தோல், கருஞ்சீரகம், பெரிய வெங்காயம் மற்றும் துளசியை எடுத்துக்கொள்ள வேண்டும்.
-
ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் மற்றும் ஆமணக்கு எண்ணெய் ஆகியவற்றை சூடுப்படுத்த வேண்டும்.
-
பின் அதனுடன் கறிவேப்பிலை, எலுமிச்சை தோல், கருஞ்சீரகம், பெரிய வெங்காயம் மற்றும் துளசியை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
-
இறுதியாக வடிக்கட்டி எடுத்துக் கொண்டு பின் தலையில் தினமும் பூசி வரவேண்டும்.
- இவ்வாறு செய்து வந்தால் முடியும் வளர்ச்சியடையும்.
நித்தியகல்யாணி ஹேர்பெக்
-
தேயிலை தண்ணீர், கோப்பி தூள் மற்றும் நித்தியகல்யாணி எடுத்துக் கொள்ள வேண்டும்.
-
ஒரு மிக்ஸியில் நித்தியகல்யாணி இதழ் மற்றும் தேயிலை தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- இதனுடன் கோப்பி தூள் சேர்த்து கலந்து, வடிக்கட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
- பின் ஒரு பாத்திரத்தில் வைத்து சூடுப்படுத்தி தலையில் பூசி வந்தால் நல்லது.
- இது முடியின் வேர் வரை சென்று முடியை வளரவும் விடும் மேலும் நரைக்கவும் விடாது.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US