முக சுருக்கமா? இதனை போக்க இதோ சில அசத்தலான டிப்ஸ்!
இன்றைய காலக்கட்டத்தில் வயதான பிறகு வரக்கூடிய சரும சுருக்கங்கள் இளவயதிலேயே வந்துவிடுகிறது.
குறிப்பாக நெற்றியில், கண்களை சுற்றி, கண்களின் ஓரத்தில் எங்கே வேண்டுமானாலும் இது வரலாம்.
எனவே இதனை அலட்சியப்படுத்தமால் எளிய முறையில் போக்குவதே நல்லது.
அந்தவகையில் உங்கள் சரும சுருக்கத்தை எப்படி போக்கலாம் என்பதற்கான குறிப்புகளை இப்போது பார்க்கலாம்.
- விளக்கெண்ணெயை தனியாக பயன்படுத்தாமல் இதனுடன் அத்தியாவசிய எண்ணெய் உங்களுக்கு விருப்பமானதை தேர்வு செய்து அதனுடன் ஒரு டீஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து (தேவைக்கேற்ப) பயன்படுத்தினால் முகச்சுருக்கங்கள் மறைந்துவரும்.
- பாதாம் எண்ணெய் விரலில் தொட்டு முகத்துக்கு மென்மையாக மசாஜ் செய்வதன் மூலம் சருமத்திலிருக்கும் சுருக்கங்கள் மென்மையாக நீங்கி சருமம் இயல்பு நிலைக்கு திரும்பும்.
- தேனுடன் இலவங்கப்பட்டை கலந்து சுருக்கங்கள் இருக்கும் இடத்தில் பயன்படுத்தலாம். இது சருமத்துக்கு நீரேற்றத்தை கொடுக்கும். சருமம் வறட்சியடைவதை தடுக்கும்.அதே போன்று சரும சுருக்கங்களையும் போக்கும்.
- தேங்காயெண்ணெயை இலேசாக சூடாக்கி தவறாமல் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் சருமம் வலுப்பெற்று சுருக்கங்கள் மறைய தொடங்கும். தினமும் இரவு நேரத்தில் இதை செய்து வரலாம்.
- ஆலிவ் எண்ணெய் சரும சுருக்கங்களை திறம்பட நிர்வகிக்கும். நெற்றியில் இருக்கும் நீண்ட கோடுகளை நேர்த்தியான கோடுகளை சரி செய்து சருமத்தை பளிச்சென்று வைத்திருக்க செய்யும். சருமத்துக்கு இன்னும் பல நன்மைகளையும் அளிக்க உதவும்.
- முட்டையின் வெள்ளைக்கருவை முகத்தில் பயன்படுத்தி அதிக குளிர்ச்சியில்லாத மந்தமான நீரில் முகத்தை கழுவி எடுங்கள். வாரத்தில் இரண்டு நாட்கள் இதை செய்து வந்தாலே சருமத்தில் சுருக்கங்கள் மறையும்.
- வைட்டமின் ஈ மாத்திரை வடிவில் கிடைக்கிறது இதை நேரடியாகவே நீங்கள் சருமத்துக்கு பயன்படுத்தலாம். அடர்த்தியாக இருப்பதால் சில துளிகளை மட்டும் சருமத்தின் மீது பயன்படுத்தினால் போதும்.
- கற்றாழை ஜெல் வடிவில் பயன்படுத்தினால் இது சருமத்தை இளமையாக ஜொலிப்பாக வைத்திருக்க செய்கிறது.சரும சுருக்கங்களை போக்க் ஓய்வாக இருக்கும் போதெல்லாம் கற்றாழையை பயன்படுத்தலாம்.
- வெள்ளரிக்காய் சாற்றை பயன்படுத்துவதன் மூலம் சருமத்தில் இருக்கும் நேர்த்தியான கோடுகள் மறைகிறது. தொடர்ந்துவெள்ளரிச்சாறை பயன்படுத்தினால் சருமம் தெளிவாக அழகாக வைத்திருக்கலாம்.
- அன்னாசிப்பழச்சாறு வயதான எதிர்ப்பு தன்மை கொண்டவை. முகத்தில் இருக்கும் சுருக்கங்களை போக்க அன்னாசிப்பழத்தின் சாற்றை எடுத்து முகத்தில் சுருக்கங்கள் இருக்கும் இடத்தில் தடவி விடவும். இதை 10 முதல் 15 நிமிடங்கள் வரை வைத்து பிறகு முகத்தை கழுவி எடுக்கவும்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022