மூன்றே நாளில் கருவளையம் காணாமல் போக வேண்டுமா?
கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையம் இன்று பலரும் சந்திக்கும் பிரச்சனைகளில் முக்கியமானதாக இருக்கிறது.
குறிப்பாக பருவ வயதை அடையும் பெண்களுக்கும் முன்கூட்டியே இந்த பிரச்சனை அதிகரித்துவருகிறது.
முகத்தில் அந்த இடம் மட்டும் கருப்பாக தெரியும் அளவுக்கு கருவளையம் அசிங்கமாக காணப்படும்.
இது போன்ற பிரச்சினைக்கு வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களை வைத்தே தீர்வு காணமுடியும். தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.
image - istockphoto.com/vladimirFLoyd
- ஒரு ஸ்பூன் அளவுக்கு கற்றாழை ஜெல்லை எடுத்து அதை காட்டனில் அப்ளை செய்து அதை அப்படியே கண்களுக்கு அடியில் இந்த காட்டனை கற்றாழை ஜெல்லோடு அப்படியே கண்களுக்கு மேல் வைத்திருக்க வேண்டும். கண்களின் கருவளையம் உள்ள பகுதிகளில் கற்றாழை ஜெல்லை அப்ளை செய்த பிறகு சுமார் 10-15 நிமிடங்கள் வைத்திருந்து பின், ஈரமான துண்டு அல்லது டிஸ்யூ பேப்பரால் துடைத்துவிட வேண்டும். தொடர்ந்து மூன்று நாட்கள் இப்படி செய்து வர மூன்றே நாட்களில் கண்களில் கருவளையங்கள் நன்றாகக் குறைந்து விடும்.
- மஞ்சள் மற்றும் மோர் இரண்டையும் கலந்து பேஸ்ட் ஆக்கிக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை உங்களுடைய கண்களுக்குக் கீழே கருமையாக இருக்கும் பகுதிகளில் தடவி நன்கு உலர விட வேண்டும்.
15 - 20 நிமிடங்கள் கழித்து பார்த்தால் நன்கு உலர்ந்திருக்கும். பின்பு முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதை ஒரு நாளைக்கு இரண்டு முறை பயன்படுத்த வேண்டும்.
- ஒரு பௌலில் வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொள்ள வேண்டும். 10 நிமிடங்கள் ஊறிய பின் அதை எடுத்து பின் ஃபிரிட்ஜில் ஃப்ரீசருக்குள் 20 நிமிடங்கள் வைத்து விட வேண்டும்.
தேநீர் பைகள் போதுமான அளவு குளிர்ந்தவுடன், அவற்றை எடுத்து அதன் குளிர்ந்த தன்மை போகிற வரைக்கும் கண்களை மூடிக்கொண்டு, கண்ணுக்கு மேலே வைக்க வேண்டும்.
இது கண்களின் சூட்டை குறைப்பதோடு கருவளையங்ளை விரைவாகப் போக்க உதவி செய்யும்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.