நீரிழிவு நோய்க்கு வீட்டின் சமையலறையில் இருக்கும் மருந்துகள்: என்னென்ன தெரியுமா?
சர்க்கரை நோய் உள்ளவர்கள் உணவுக் கட்டுப்பாடும் வாழ்க்கை முறை மாற்றங்களும் தான் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவி செய்யும்.
அதிலும், இரத்த சர்க்கரை அளவை குறைக்க ஆரோக்கியமான உணவுகள், உடற்பயிற்சிகள் மற்றும் நடைப்பயிற்சிகளை மேற்கொள்வது மிகவும் அவசியமாகும்.
அந்தவகையில், சர்க்கரை நோய்க்கு வீட்டின் சமயலறையில் இருக்கும் மருந்துகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
இலவங்கப்பட்டை
இலவங்கப்பட்டையில் இருக்கும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தை குறைப்பதற்கு உதவுகின்றன.
ஆக்சிடேட்டிவ் அழுத்தம் என்பது பெரும்பாலான நாள்பட்ட நோய்களை உண்டாக்கக்கூடிய தன்மை கொண்டது.
இலவங்கப்பட்டை இன்சுலினை போல செயல்பட்டு ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. மேலும் ரத்த சர்க்கரையை செல்களுக்குள் நகர்த்துவதற்கு இன்சுலின் திறனை அதிகரிக்கிறது.
மஞ்சள்
மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்ற ஆக்டிவ் காம்பவுண்ட் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை குறைக்கிறது.
அது மட்டுமல்லாமல் நீரழிவு நோய் சம்பந்தப்பட்ட சிக்கல்களையும் தடுக்கிறது.
மேலும், ரத்த சர்க்கரை அளவுகளை சீராக்கி, நீரழிவு நோயை கட்டுக்குள் வைப்பதற்கு உதவுகிறது.
பன்னீர் பூ
பன்னீர் பூக்கள் பீட்டா செல்களை ஆற்றுவதன் மூலமாக இன்சுலினை சிறந்த முறையில் பயன்படுத்துவதற்கு கணையத்திற்கு உதவுகிறது.
இதனை தினமும் சிறிய அளவில் எடுத்து வந்தாலே அதிக ரத்த சர்க்கரை அளவுகளை கூட கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம்.
பன்னீர் பூக்கள் நமது செல்களுக்குள் இருக்கக்கூடிய இன்சுலின் அளவை பராமரிக்கிறது. மேலும், இன்சுலினை உற்பத்தி செய்யும் கணையத்தில் பீட்டா செல்களுக்கு ஏற்படும் சேதத்தையும் குணப்படுத்துகிறது.
வெந்தயம்
வெந்தயத்தில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் மிக பிற கெமிக்கல்கள் இருப்பதால் செரிமானத்தை மெதுவாக்கி, உடலானது கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரையை பொறுமையாக உறிஞ்சுவதற்கு உதவுகிறது.
அதுமட்டுமல்லாமல் உடலானது சர்க்கரையை பயன்படுத்தும் விதத்தை மேம்படுத்தி இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கிறது.
பாசில் மரம்
பாசில் மரமானது நீரழிவு நோயின் சிகிச்சையில் மிகவும் பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு மூலிகை ஆகும்.
இது உடலின் இன்சுலின் எதிர்ப்பு திறனை அதிகரிக்க உதவுகிறது. மேலும், ரத்த சர்க்கரை அளவுகளை திறம்பட குறைக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |