கழுத்தில் உள்ள கருமையை நீக்க இந்த ஒரு பொருள் போதும்.., எப்படி பயன்படுத்துவது?
பெண்களுக்கு கழுத்தில் செயின் எப்போதும் அணிந்து கொண்டே இருப்பதால் அது கழுத்தில் பதிந்து கருப்பாகிவிடும்.
அதேபோல், ஆண்களுக்கு கழுத்து பகுதிகளில் காலர் துணி அணிவதால் கருமை நிறம் ஏற்படுகிறது.
இதிலிருந்து நிரந்தரமாக நிவாரணம் பெற பேக்கிங் சோடாவை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- உருளைக்கிழங்கு- 3 ஸ்பூன்
- பேக்கிங் சோடா- ஒரு ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு உருளைக்கிழங்கை துருவி அதன் சாறை தனியாக பிழிந்து எடுக்கவும்.
பின் அதில் பேக்கிங் சோடாவை கலந்து பேஸ்ட் தயாரிக்கவும்.
அடுத்து ஒரு பஞ்சு துண்டைப் பயன்படுத்தி இந்த பேஸ்டை கழுத்தில் தடவி 10 நிமிடங்கள் உலர விட்டு பிறகு வெதுவெதுப்பான நீரால் கழுவவும்.
2. தேவையான பொருட்கள்
- ஆரஞ்சு தோல்- 1
- பேக்கிங் சோடா- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு ஆரஞ்சு தோலை எடுத்து அதில் பேக்கிங் சோடாவை தூவி சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
இந்த தோலை கருமையான கழுத்துப் பகுதியில் 2-3 நிமிடங்கள் நன்கு தேய்க்கவும்.
பின் இதை 15-20 நிமிடங்கள் விட்டுவிட்டு பிறகு வெதுவெதுப்பான நீரால் கழுவவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |