முகத்தில் அதிகமா குன்றும் குழியா இருக்கா; அப்போ இதை செய்திடுங்கள்!
Aloe Vera
Skin Care
By Kirthiga
பொதுவாகவே பெண்கள் அழகுக்கு தான் முக்கியத்துவம் காட்டுவார்கள், பலருக்கு முகத்தில் கரும்புள்ளி மற்றும் முகப்பரு என பலவும் ஏற்படும். அதுப்போலவே முகத்தில் குழியும் வரும்.
இதுவும் சிலருக்கு தொந்தரவாகவுள்ளது, முகத்தில் குழிகள் அதிகம் உள்ளவர்களுக்கு, முகத்தில் எண்ணெய் வருவதோடு அழுக்குகளும் படியும்.
அதற்காக கவலைப்படாமல் வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டு இதை எப்படி நீக்கலாம் என்று தெரிந்துக் கொள்வோம்.
தேவையான பொருட்கள்
-
கற்றாழை - 02 தே.கரண்டி
-
வேப்பிலை - ஒரு கைப்பிடி
-
தக்காளி - 01
- வெண்களிமண் - 02 தே.கரண்டி
செய்முறை
-
முதலில் கற்றாழை, வேப்பிலை மற்றும் தக்காளி சேர்த்த அரைத்து, வடிக்கட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
-
பின் வெண்களிமண் சேர்த்து சேர்த்து பேஸ்ட் போல எடுத்துக் கொள்ள வேண்டும்.
-
இந்த பேஸ்டை 15 நிமிடம் வரை முகத்தில் பூசி வைக்க வேண்டும்.
-
காய்ந்தவுடன் தண்ணீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
- இதை ஒரு வாரத்தில் இரண்டு முறையாவது செய்துக் கொள்ள வேண்டும்.
இன்னுமொரு முறையும் உள்ளது முகத்தில் உள்ளது குழிகளை நீக்க.
தேவையான பொருட்கள்
-
கடுக்காய் பொடி - 01 தே.கரண்டி
- தண்ணீர் - 1/2 கப்
- முல்தானி மெட்டி - 01 தே.கரண்டி
செய்முறை
-
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கடுக்காய் பொடி சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். அதாவது தண்ணீர் குறையும் வரை.
-
பின் அதை வடிக்கட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
-
அதனுடன் முல்தானி மெட்டியை சேர்த்து கலந்து முகத்தில் பூசிக் கொள்ள வேண்டும்.
-
இதையும் வாரத்தில் 2முறை செய்தால் முகத்தில் இருக்கும் குழி மறைவதை நீங்களே பார்ப்பீர்கள்.
மேலும் இதில் இரண்டையும் செய்யாமல் ஏதாவது ஒரு முறையை பின்பற்றி செய்தால் நல்லது.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US