தொண்டை கரகரப்பா? இதிலிருந்து விடுபட இதோ சூப்பரான எளிய வைத்தியம்
பொதுவாக பருவகால மாற்றத்தால் சளி, இருமல், காய்ச்சல், தொண்டை கரகரப்பு போன்ற உபாதைகள் உண்டாக கூடும்.
சாதாரணமாக தொற்றும் வைரஸ் கிருமிகளால் இவை உண்டாவது இயல்புதான்.
பெரும்பாலும் இத்தகைய பிரச்சனையின் போது மாத்திரைகளை சுயமாக எடுத்துகொள்ளாமல் பாட்டிகள் கால கைவைத்தியத்தை முயற்சி செய்யலாம். தற்போது தொண்டை கரகரப்பை போக்க கூடிய சூப்பரான அற்புத வைத்தியம் ஒன்றை இங்கே பார்ப்போம்.
தேவையான பொருள்
- வால் மிளகு - 50 கிராம்
- சுக்கு - 50 கிராம்
- திப்பிலி - 50 கிராம்
- ஏலரிசி - 50 கிராம்
- தேன் - தேவையான அளவு
செய்முறை
முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். பிறகு வால் மிளகு,சுக்கு,திப்பிலி மற்றும் ஏலரிசி ஆகிய நான்கு பொருட்களையும் நன்கு பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
வறுத்த பொருட்களை இடித்து பொடியாக்கி ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.
மேலும் தேனுடன் இடித்த பொடி ஒரு தேக்கரண்டி எடுத்துக்கொண்டு நன்கு கலக்கவும்.
இதனை தொடர்ந்து குடித்து வந்தால் தொண்டை கரகரப்பு முற்றிலுமாக குணமாகும்.