முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவும் பேஸ்பேக்.., எப்படி தயாரிப்பது?
பொதுவாக அனைவரும் முகத்தினை பொலிவாக வைத்துக்கொள்ள தான் விரும்புவார்கள்.
இருப்பினும் சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் நமது உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.
அந்தவகையில், முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவும் பேஸ்பேக்கை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- காபி- 1 ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய்- 1 ஸ்பூன்
எப்படி தயாரிப்பது?
முதலில் ஒரு கிண்ணத்தில் காபித் தூள் மற்றும் தேங்காய் எண்ணெயை எடுத்து கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு அதை முகத்தில் தடவி சிறிது நேரம் மென்மையாக ஸ்க்ரப் செய்ய வேண்டும்.

அதன் பின் குளிர்ந்த நீரைப் பயன்படுத்தி கழுவ வேண்டும்.
2. தேவையான பொருட்கள்
- கடலை மாவு- 1 ஸ்பூன்
- பால்- 2 ஸ்பூன்
எப்படி தயாரிப்பது?
முதலில் ஒரு கிண்ணத்தில் கடலை மாவை எடுத்து, அத்துடன் பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின்பு அதை முகத்தில் தடவி சிறிது நேரம் மென்மையாக ஸ்க்ரப் செய்ய வேண்டும்.
அடுத்த காய்ந்த பின் குளிர்ந்த நீரால் மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.
இதனை வாரத்திற்கு ஒரு முறை தொடர்ந்து பயன்படுத்தி வர முகம் பொலிவாக மாறும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |