அந்தரங்க பகுதியில் இருந்து துர்நாற்றம் வருதா? உடனே இப்படி செய்து பாருங்க!
பொதுவாகவே பெண்கள் எதிர்க்கொள்ளும் ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது யோனியில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் தான்.
யோனி வெளியேற்றம் என்பது பிறப்புறுப்பில் இருந்து வெளியேறும் ஒரு வெள்ளை நிற திரவம் ஆகும். இதனால் பெண்களுக்கு ஒரு துர்நாற்றம் ஏற்படும். அதை எவ்வாறு தடுக்கலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
கர்ப்ப காலத்தில் பெண்கள் இவையெல்லாம் செய்யக் கூடாது: கட்டுக்கதைகளுக்குப் பின்னால் இருக்கும் உண்மைகள்
யோனி துர்நாற்றம் அறிகுறிகள்
-
அதிகப்படியான வெள்ளை வெளியேற்றம்
-
வெளியேற்றத்தின்போது துர்நாற்றம்
-
உலோக வாசனை வெளியேற்றம்
-
அடர்த்தியான, வெள்ளை வெளியேற்றம்
- மீன் துர்நாற்றம்
-
பச்சை அல்லது மஞ்சள் வெளியேற்றம்
-
யோனியில் அரிப்பு அல்லது வலி
- அடிவயிற்றின் கீழ் பகுதியில் வலி
- உடலுறவின் போது வலி
யோனி நாற்றத்திற்கு என்ன காரணம்?
கர்ப்பம், தாய்ப்பால் அல்லது மாதவிடாய் காரணமாக ஈஸ்ட்ரோஜன் அளவுகளில் மாற்றம் ஏற்பட்டு யோனியில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது.
இதற்கு இறுக்கமான ஆடைகளை உங்களின் பிறப்புறுப்பு பகுதியில் அணிவதை தவிர்க்க வேண்டும். அவை எரிச்சல் மற்றும் அதிகப்படியான வியர்வை மற்றும் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். ஆகவே பிறப்புறுப்பில் இருந்து துர்நாற்றம் ஏற்படக்கூடும்.
தேயிலை மர எண்ணெய்
தேயிலை மர எண்ணெயில் மூன்று முதல் நான்கு துளிகள் தண்ணீரில் கலந்து யோனி பகுதியில் கழுவ வேண்டும்.
ஆலிவ் எண்ணெயில் 2-3 சொட்டு தேயிலை மர எண்ணெயையும் கலந்து ஒரு துணியில் நனைத்து யோனி பகுதியில் 1மணி நேரத்திற்கு வைக்கவும்.
இவ்வாறு தினமும் செய்வதன் மூலம் துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம்.
அன்னாசி பழம்
தினமும் சாப்பிடக்கூடிய உணவுகளில் அன்னாசிப்பழத்தை சேர்க்க வேண்டும். ஒன்று முதல் இரண்டு கிளாஸ் அன்னாசி பழச்சாறு ஒரு சில நாட்களுக்கு குடித்துவர இது நீங்கும்.
பேக்கிங் சோடா
குளிக்கும் போது சோடாவைச் சேர்த்து, கீழ் உடல் பகுதியை சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். ஒரு கப் பேக்கிங் சோடாவை 2 கப் தண்ணீரில் கலந்து யோனி பகுதியில் பயன்படுத்தலாம். இது ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |