கருப்பான சருமத்தை பொலிவாக்க பாலுடன் இந்த 2 பொருள் போதும்: எப்படி பயன்படுத்துவது?
பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள தான் நினைப்பார்கள்.
ஆனால் முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
அந்தவகையில், வீட்டிலிருந்தபடியே சரும பிரச்சனைகள் நீங்கி, முகம் பளபளக்க பாலுடன் இந்த 2 பொருட்கள் போதும்.
தேவையான பொருட்கள்
- பால் கிரீம்- 2 ஸ்பூன்
- தேன்- 1 ஸ்பூன்
- சந்தன பொடி- 1 ஸ்பூன்
தயாரிக்கும் முறை
முதலில் ஒரு பவுலில் பால் கிரீம், தேன் மற்றும் சந்தன பொடியை எடுத்துக் கொள்ள வேண்டும்.
மூன்று பொருட்களையும் நன்றாக கலந்து அதை முகத்தில் தடவவும்.
பின் சுமார் 20 நிமிடங்கள் அப்படியே விட்டு பின் முகத்தை நன்கு கழுவுங்கள்.
கிடைக்கும் நன்மைகள்
இது சருமத்தை ஆரோக்கியமாக்கும், இது வயதான அறிகுறிகளைக் குறைத்து , சருமத்தை மென்மையாக்குகிறது.
இது இயற்கையான சுத்தப்படுத்தியாக செயல்பட்டு இறந்த செல்களை குறைக்கிறது. மேலும் வறட்சி நீங்கி, முகம் பொலிவடைவதுடன், தழும்புகளும் நீங்கும்.
சந்தனத்தில் முதுமையை தடுக்கும் தன்மை உள்ளது. இது முகத்திற்கு பொலிவைத் தருவதோடு, வயதான அறிகுறிகளையும் குறைக்கிறது.
தேனில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் சருமத்தை உள்ளிருந்து சுத்தப்படுத்துகிறது.
மேலும், முகப்பருவைக் குறைத்து, சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருப்பதோடு, தழும்புகளையும் நீக்குகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |