கருவளையத்தை நிரந்தரமாக நீக்க உதவும் பால்.., எப்படி பயன்படுத்துவது?
பெண்களை மிகவும் அழகாக காட்டுவது எப்போதுமே அவர்களது கண்கள் தான்.
சில பெண்களுக்கு கண்ணை சுற்றி கருவளையங்கள் தோன்றி சோர்வாக இருப்பதுபோல் தோன்றுகிறது.
அந்தவகையில், முகத்தின் அழகினை கெடுக்கும் கருவளையத்தை நிரந்தரமாக நீக்க பாலை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் பச்சைப் பாலை எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு பஞ்சு உருண்டையை எடுத்து அதனை பாலில் நனைத்து கண்களின் மேல் வைக்கவும்.
அடுத்து 15-20 நிமிடங்கள் கண்களில் இந்த பஞ்சை அப்படியே வைக்கவும்.
பின்னர், சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்.
இதனை தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் கருவளையம் நிரந்தமாக நீங்கும்.
பாலில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்திற்கு நன்மை வழங்க பெரிதளவில் உதவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |