முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை நீக்க உதவும் தேங்காய் எண்ணெய்: எப்படி பயன்படுத்துவது?
பொதுவாக வயது அதிகரித்து செல்லும்போது முகத்தில் சுருக்கம் விழுவது என்பது இயல்பான ஒன்று.
சுருக்கும் விழுவதற்கு அதிகமாக வெயிலில் சுற்றுவது, சருமத்தை ஒழுங்காக பராமரிப்பது பாேன்ற பல காரணங்கள் உள்ளது.
அந்தவகையில், முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை நீக்க தேங்காய் எண்ணெயை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் எண்ணெய்- ½ ஸ்பூன்
- ரோஸ் வாட்டர்- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெயில் ரோஸ் வாட்டரை சேர்த்து கலக்கவும்.
பின் இதனை முகத்தில் தடவி சிறிது நேரம் அப்படியே விட்டு விடுங்கள்.
இதற்கு பிறகு, முகத்தை லேசாக மசாஜ் செய்து, பின்னர் முகத்தை தண்ணீரில் கழுவலாம்.
இதனை காலையில் குளிப்பதற்கு முன்பு இதனை பயன்படுதலாம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் எண்ணெய்- 1 ஸ்பூன்
- வைட்டமின் இ காப்ஸ்யூல்- 1
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெய் மற்றும் வைட்டமின் இ காப்ஸ்யூல் சேர்த்து கலந்துகொள்ளவும்.
பின் இந்த கலவையை முகத்தில் தடவி லேசாக மசாஜ் செய்து பின் தண்ணீரில் கழுவிக்கொள்ளலாம்.
இதை தொடர்ந்து பயன்படுத்தி வருவதன் மூலம், சருமத்தில் இரத்த ஓட்டம் மேம்படும், மேலும் சுருக்கங்களும் குறையும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |