மூச்சுத்திணறலை எளிய முறையில் குறைக்கும் சில வீட்டு வைத்தியம் இதோ !
home remedies
wheezing
By Kishanthini
இன்று ஏராளமானோருக்கு மூச்சுத்திணறல் பிரச்சனை இருக்கிறது. மூச்சுத்திணறல் பிரச்சனை இருப்பவர்கள் சுவாசிப்பதில் சிரமத்தை சந்திப்பதோடு, மூச்சை வெளிவிடும் போது சப்தத்துடன் காற்று வெளியேறும்.
இப்பிரச்சனை ஒருவருக்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம். இவர்கள் எந்நேரமும் தங்கள் கையில் இன்ஹேலரை வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், அவர்களது நிலைமையே மோசமாகிவிடும்.
ஆனால் இன்ஹேலர் மூச்சுத்திணறல் பிரச்சனையில் இருந்து முற்றிலும் பாதுகாக்கும் என்று கூறிவிட முடியாது. இருப்பினும், மூச்சுத்திணறல் பிரச்சனைக்கு ஒருசில வீட்டு வைத்தியங்கள் உள்ளன.
அந்தவகையில் மூச்சு திணறலை போக்கும் சில எளிய வழிமுறைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
- காற்றோட்டமான இடத்தில் சளி உருவாகும் போது மூச்சுத்திணறலும் உண்டாகும். அப்போது சூடான திரவங்கள் குடிப்படன் மூலம் இது மூச்சுவிடுதலை எளிதாக்கும். இது சளியை உடைக்க மற்றும் காற்றுப்பாதையில் அடைப்பை தடுக்க உதவும்.
- தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து இரண்டு முறை கலக்கி குடிப்பதன் மூலம் தொண்டை நெரிசலை போக்க உதவுகிறது. மேலும் தேன் கலந்த வெந்நீரில் சிட்டிகை இலவங்கபொடி கலந்து எடுக்கலாம். இது இருமல் மற்றும் மூச்சுத்திணறலுக்கு வழிவகுக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும்.
- அகன்ற கிண்ணத்தில் நீரை ஊற்றி தலைக்கு மேல் துணியை போர்த்தி நீராவியை இழுக்கவும். நீரில் புதினா அல்லது துளசி இலைகள் ஆவி பிடிப்பதன் மூலம் பலன் வேகமாக கிடைக்கும். புதினா எண்ணெய் வலி நிவாரணம் மற்றும் அழற்சி எதிர்ப்பு விளைவுகளை உண்டாக்கும் .
- தடைசெய்யப்பட்ட காற்றுபைகள் புகையினால் மேலும் சிக்கலை சந்திக்கும். மூச்சுத்திணறல் இருக்கும் போது புகைப்பிடிப்பது அறிகுறியை மோசமாக்கும். அதே போன்று புகைப்பவர்களின் அருகில் இருப்பதும் மோசமான பாதிப்பை உண்டாக்கும்.
- உணவில் வெங்காயத்தை அப்படியே நறுக்கி சாப்பிடுவதன் மூலம் மூச்சுத்திணறலை குறைக்கலாம். இது நுரையீரலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவும் மேலும் தடுக்கப்பட்ட காற்றுப்பைகளை திறக்கும். இது மூச்சுத்திணறலுக்கு சிகிச்சை அளிக்கும்.
- கடுகு எண்ணெய் சூடாக்கி கற்பூரம் சேர்க்கவும். கற்பூரம் முழுமையாக கரையும் வரை வைத்து இறக்கி மார்பில் தடவி எடுக்கவும். தொடர்ந்து 15 நிமிடங்கள் வரை மார்புக்கு மசாஜ் செய்யவும். தினமும் 3 முறை இதை தடவி வரவும். இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. சுவாசக்குழாயை சீராக்குகிறது. மேலும் சுவாசத்தை எளிதாக்குகிறது.
- மூச்சுக்குழாய் அழற்சி ஒவ்வாமை மற்றும் மூச்சுத்திணறல் போன்ற பொதுவான காரணங்களுக்கு சுவாச பயிற்சிகள் உதவக்கூடும். மூச்சுத்திணறல் உள்ளிட்ட மூச்சுக்குழாய் ஆஸ்துமா தொடர்பான சுவாச பிரச்சனைகளுக்கு யோகா உதவக்கூடும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US