மாதவிடாயின் போதும் ஏற்படும் வலிகளை நீக்க சில எளிய வீட்டு வைத்தியங்கள்
மாதவிடாய் சுழற்சியின் போது பெண்களுக்கு வலியையும், அசௌகரியத்தையும் ஏற்படுத்தும்.
அதேபோல், மாதவிடாயின் போது இடுப்பு, தொடை, மார்பு பகுதி என உடலின் பல்வேறு இடங்களில் வலி ஏற்படும்.
அடிவயிற்றுப் பகுதியில் பிடிப்புகளும் அதிகமாக இருக்கும். ஆனால் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகளை நம்மால் கட்டுப்படுத்த முடியும்.
மாதவிடாய் வலி
பெண்களுக்கு மாதவிடாய் காலத்திற்கு சில மணி நேரத்திற்கு முன்பு அல்லது ஒரு நாளைக்கு முன்பு கூட வலி ஏற்படும்.
இதைத் தவிர கால் குடைச்சல், வலி போன்ற பாதிப்புகளையும் மாதவிடாயின் பொது ஏற்பட நேரிடும்.
இதோடு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக பெண்களுக்கு 24 மணி நேரம் முதல் 48 மணி வரை கூட வலி நீடிக்கும்.
குறிப்பாக மாதவிடாய் காலத்தில் எண்டோமெட்ரியோடிக் வலி மிகவும் கடுமையானதோடு ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை வலி நீடிக்கும்.
இதற்கு எந்தவித மாத்திரை, மருந்துகள் உதவி எதுவும் தேவைப்படாது.
மாதவிடாய் காலத்தில் கால் வலியைக் குணப்படுத்துவதற்கு சில வீட்டு வைத்தியங்கள் குறித்து விரிவாக காணலாம்.
வீட்டு வைத்தியம்
மாதவிடாயின் போது ஏற்படும் வலிகளை குறைக்க சுடுதண்ணீர் கொண்டு கால்களில் ஒத்தரம் கொடுக்கலாம்.
மேலும், வலி அதிகமாக இருக்கும்பொழுது சூடான தண்ணீரில் குளிக்க வேண்டும். இது தசைகளில் ஏற்படக்கூடிய வலியைக் குறைக்க உதவியாக இருக்கும்.
குறிப்பாக, மாதவிடாயின் போது ஏற்படும் வலிகளை குறைக்க சுமார் 30 நிமிடங்களுக்கு மெதுவாக வாக்கிங் செல்ல வேண்டும்.
மாதவிடாய் சுழற்சியின் போது உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும், ஏனெனில் இது சோர்வை தவிர்க்க உதவுகிறது. எனவே தண்ணீர், இளநீர் அதிகளவு பருக வேண்டும்.
மாதவிடாய்க்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக உப்பு, மசாலா மற்றும் சர்க்கரை போன்றவற்றை உண்ணுவதை குறைக்கவும்.
இவ்வாறு உண்பதை தவிர்க்க, இது தசைகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவும், இதன் விளைவாக வலி நீக்க உதவியாக இருக்கும்.
மேலும், மாதவிடாய் காலத்தில் கடுமையான வலி ஏற்படும் பட்சத்தில் மருத்துவரின் ஆலோசனைப் பெறுவது மிகவும் நல்லது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |