ஒரே வாரத்தில் கருவளையம் நீங்க உதவும் உருளைக்கிழங்கு: எப்படி பயன்படுத்துவது?
பெண்களை மிகவும் அழகாக காட்டுவது எப்போதுமே அவர்களது கண்கள் தான்.
ஆனால் சிலருக்கு கண்ணை சுற்றி சிலருக்கு கருவளையங்கள் தோன்றி சோர்வாக இருப்பதுபோல் தோன்றுகிறது.
இதற்கு முக்கிய காரணம், கணினி மற்றும் செல்போனை அதிகளவு பயன்படுத்துவதுதான்.
முகத்தின் அழகினை கெடுக்கும் இந்த கருவளையங்கள் நிறைந்தரமாக நீங்க உருளைக்கிழங்கை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
எப்படி பயன்படுத்துவது?
முதலில், உருளைக்கிழங்கை தோல் சீவி துருவி தண்ணீர் ஊற்றி நன்கு கலந்துக் கொள்ளவும்.
இதையடுத்து ஐஸ் க்யூப் தயாரிக்கும் டப்பாவில் சிறிது சிறிதாக ஊற்றி பிரிட்ஜிக்குள் வைத்து ஐஸ் க்யூப் ஆக மாறியதும் எடுத்துகொள்ளவும்.
பின் இதனை முகத்தில் வைத்து மெதுவாக மசாஜ் செய்து குளிர்ந்த நீரால் கழுவிக்கொள்ளலாம்.
உருளைக்கிழங்கு ஐஸ் க்யூப் மசாஜை வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து செய்து வந்தால் கருவளைய பிரச்சனையை நிரந்தரமாக தீர்க்க உதவுகிறது.
உருளைக்கிழங்கில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் சருமத்தை எப்பொழுதும் பளபளப்புடன் வைத்திருக்க உதவுவதோடு.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |