அசிங்கமாக தெரியும் கருவளையம் நிரந்தரமாக நீங்க உதவும் எளிய வீட்டு வைத்தியம்
கண்ணை சுற்றி சிலருக்கு கருவளையங்கள் சோர்வாக இருப்பதுபோல் தோன்றுகிறது.
அந்தவகையில், முகத்தின் அழகினை கெடுக்கும் இந்த கருவளையங்கள் நிறைந்தரமாக நீக்க உதவும் வீட்டு வைத்தியம் குறித்து பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- வெள்ளரி- 1
- கற்றாழை ஜெல்- 2 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் வெள்ளரியை அரைத்து அதன் சாறை எடுத்துகொள்ளளவும்.
பின் இந்த சாறுடன் கற்றாழை ஜெல்லை கலந்து இரவில் தூங்கும் முன் கருவளையம் உள்ள பகுதிகளில் இதை தடவவும்.
இதற்கடுத்து 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் உங்கள் முகத்தை கழுவவும்.
2. தேவையான பொருட்கள்
- உருளைக்கிழங்கு- 1
பயன்படுத்தும் முறை
முதலில் உருளைக்கிழங்கை துருவி அதன் சாறை பிழிந்து எடுத்துக்கொள்ளவும்.
பின் இந்த சாற்றை ஐஸ் ட்ரேயில் ஊற்றி பிரிட்ஜில் உறைய வைக்கவும்.
இதனை தினமும் இரவு படுக்கும் முன் கண்களை சுற்றி மெல்ல மசாஜ் செய்யவும்.
இறுதியாக காலையில் எழுந்து வெதுவெதுப்பான நீரை கொண்டு கழுவிக்கொள்ளலாம்.
3. தேவையான பொருட்கள்
- தேன்- 1 ஸ்பூன்
- காபி- ½ ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் தேன் மற்றும் காபி பொடி சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
பின்னர் இதனை கருவளையம் உள்ள பகுதியில் தடவு மெதுவாக மசாஜ் செய்யவும்.
இறுதியாக 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |