முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க உதவும் கடலை மாவு: எப்படி பயன்படுத்துவது?
முகத்தில் பருக்கள் உண்டான பிறகு ஏற்படும் கரும்புள்ளிகள் முகத்தின் அழகை கெடுக்கும் விதமாக உள்ளன.
சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் நமது உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.
அந்தவகையில், முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க கடலை மாவை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கடலை மாவு- 3 ஸ்பூன்
- தக்காளி சாறு- 5 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் கடலை மாவு மற்றும் தக்காளி சாறு சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
பின் இதனை நன்கு கலந்த முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவவும்.

அடுத்து இதனை 20 நிமிடங்கள் முகத்தில் நன்கு உலரவைக்க வேண்டும்.
இறுதியாக முகத்தை தண்ணீர் பயன்படுத்து மெதுவாக மசாஜ் செய்து பின்னர் சுத்தமாக கழுவ வேண்டும்.
இதை வாரத்திற்கு 2 முறை தொடந்து பயன்படுத்தி வர முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நிரந்தரமாக நீங்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |