வாயை சுற்றியுள்ள கருமையை நீக்க உதவும் பேக்.., எப்படி தயாரிப்பது?
சிலருக்கு வாயைச் சுற்றியுள்ள பகுதி மட்டும் கருப்பாக இருக்கும்.
அதிகப்படியான மெலனின் உற்பத்தி, ஹார்மோன் மாற்றங்கள், வறட்சி அல்லது நீரிழப்பு, காப்ஃபைன் அதிகம் அருந்துவது, போதுமான சரும பராமரிப்பை கொடுக்காமல் இருப்பது காரணமாகும்.
அந்தவகையில், வாயை சுற்றியுள்ள கருமையை நீக்க உதவும் இயற்கை பேக்கை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- மஞ்சள்- 1 ஸ்பூன்
- தயிர்- 2 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் மஞ்சள் தூளை எடுதது, அத்துடன் தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின் அதை வாயைச் சுற்றியுள்ள பகுதியில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின்பு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
இதனை வாரத்திற்கு 3 முறை தொடர்ந்து பயன்படுத்தி வர வாயை சுற்றியுள்ள கருமை நீங்கும்.
2. தேவையான பொருட்கள்
- உருளைக்கிழங்கு சாறு- 2 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் உருளைக்கிழங்கை அரைத்து அதன் சாறை எடுத்துகொள்ளளவும்.
பின் ஒரு பஞ்சை இதில் நனைத்து முகத்தில் தடவி நன்கு காய வைக்க வேண்டும்.
அடுத்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
இப்படி தினமும் பயன்படுத்தி வர நல்ல பலன் கிடைக்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |