முகத்தில் உள்ள கருமையை நீக்கி உடனடி பொலிவு பெற இந்த ஒரே ஒரு Facepack
முகத்தில் இருக்கும் கருமையான திட்டுக்கள் மற்றும் முகப்பருக்கள் முகத்தின் அழகையே கெடுத்துவிடுகின்றன.
அதிகப்படியான சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் நமது உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.
இயற்கையான முறையில் முகம் மற்றும் உடலை பளபளப்பாகவும் பொலிவாகவும் இந்த பேஸ்பேக்கை பயன்படுத்துங்கள்.
தேவையான பொருட்கள்
- முல்தானி மிட்டி- 2 ஸ்பூன்
- ரோஜா பூக்கள்- 2
- கற்றாழை ஜெல்- 2 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ரோஜா இதழ்களை நன்றாக அரைத்து ஒரு பாத்திரத்தில் வைத்திக்கொள்ளுங்கள்.
அதன் பின் இதில் முல்தானி மெட்டி மற்றும் கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்றாக கலக்கவும்.
இந்த பேஸ்பேக்கை ஒரு பிரஷ் உதவியுடன் முகத்தில் தடவி 20 நிமிடங்கள் அப்படியே விடவும்.
இதற்குப் பிறகு, தண்ணீரில் பருத்தியை நனைத்து முகத்தை சுத்தம் செய்யவும்.
இந்த பேஸ்பேக்கை நீங்கள் வாரத்திற்கு 2 முதல் 3 முறை பயன்படுத்தலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |