வெயிலில் கருப்பான கைகள்.., வீட்டிலேயே வெள்ளையாக மாற்ற உதவும் வைத்தியம்
பெண்கள் எப்பொழுது தங்களது முகம் கை, கால்கள் என அனைத்தையும் பளபளப்பாக வைத்து கொள்ளத்தான் விரும்புவார்கள்.
ஆனால் வெயிலில் சென்றால் சூரிய கதிர்வீச்சின் காரணமாக முகம், கை, கால்கள் என அனைத்தும் பொலிவிழந்து போய்விடுகின்றன.
அந்தவகையில், வெயிலில் கருமையான கைகளை வீட்டிலேயே பளபளப்பாக மாற்ற உதவும் வைத்தியம் குறித்து பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- மஞ்சள்- 2 ஸ்பூன்
- பால்- 2 ஸ்பூன்
தயாரிக்கும் முறை
ஒரு பாத்திரத்தில் மஞ்சள் தூள் மற்றும் பால் சேர்த்து நன்றாக கலந்து, மெதுவாக கைகளில் தடவவும்.
பின் 10-15 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு பின் தண்ணீரில் கழுவவும்.
2. தேவையான பொருட்கள்
- எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன்
- சர்க்கரை- 1 ஸ்பூன்
தயாரிக்கும் முறை
ஒரு சிறிய பாத்திரத்தில் எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரை கலக்கவும்.
இந்த கலவையை கைகளில் தடவி 5-10 நிமிடங்கள் தேய்த்து நீரில் கழுவவும்.
3. தேவையான பொருட்கள்
- வெள்ளரி- 1
- தயிர்- 1 ஸ்பூன்
தயாரிக்கும் முறை
ஒரு கிண்ணத்தில் வெள்ளரிக்காயை துருவி பின் தயிர் சேர்த்து கலக்கவும்.
கலவையை மெதுவாக கைகளில் தடவி 10-15 நிமிடங்கள் விட்டு பின் நீரில் கழுவவும்.
4. தேவையான பொருட்கள்
- சந்தனப் பொடி- 2 ஸ்பூன்
- ரோஸ் வாட்டர்- 1 ஸ்பூன்
தயாரிக்கும் முறை
ஒரு பாத்திரத்தில் சந்தன தூள் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலக்கவும்.
கலவையை கைகளில் மெதுவாக மசாஜ் செய்து 10-15 நிமிடங்கள் அப்படியே விட்டு பின் தண்ணீரில் கழுவவும்.
5. தேவையான பொருட்கள்
- ஓட்மீல்- 2 ஸ்பூன்
- தயிர்- 1 ஸ்பூன்
- தேன்- 1 ஸ்பூன்
தயாரிக்கும் முறை
ஓட்மீல், தயிர், தேன் ஆகியவற்றை சேர்த்து கெட்டியான பேஸ்ட்டை உருவாக்கவும்.
இந்த பேஸ்ட்டை கைகளில் தடவி மெதுவாக தேய்த்து 10 நிமிடங்கள் விடவும்.
பின்னர் ஒரு மென்மையான துண்டு பயன்படுத்தி கைகளை கழுவி உலர வைக்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |