ஒரே நாளில் உதட்டை இளஞ்சிவப்பாக மாற்ற உதவும் 4 பொருள்.., எப்படி பயன்படுத்துவது?
பெண்கள் எப்பொழுதும் தங்கள் உதடுகளை அழகாக வைத்து கொள்ளத்தான் நினைப்பார்கள்.
தங்களின் உதடுகள் வெடிப்பு இல்லாமல் ஈரப்பதத்தோடு இருக்க வேண்டும் என்று தான் அனைத்து பெண்களும் விரும்புவார்கள்.
அந்தவகையில், இற்கையான முறையில் உதட்டை இளஞ்சிவப்பாக மாற்ற உதவும் 4 பொருட்களை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- எலுமிச்சை சாறு- ½
- சர்க்கரை- ½ ஸ்பூன்
- கஸ்தூரி மஞ்சள்- 1 ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய்- சிறிதளவு
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் எலுமிச்சை சாறு, சர்க்கரை, கஸ்தூரி மஞ்சள், தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.
பின் இந்த பேஸ்ட்டை ஐந்து நிமிடம் அப்படியே ஊற விட வேண்டும்.
பின்னர் இந்த பேஸ்டை உதடுகளில் அப்ளை செய்து பத்து நிமிடங்கள் அப்படியே விட்டு பின்னர் தண்ணீரில் கழுவுங்கள்.
இப்போது உங்கள் கருமையான உதடு இளஞ்சிவப்பு நிறத்தில் மாறும்.
இதனை வாரத்தில் இரண்டு முறை தொடர்ந்து பயன்படுத்திவர உதடுகள் கருமையாக மாறாமல் இளஞ்சிவப்பாகவே இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |