எப்பேர்ப்பட்ட பல்வலியையும் சரிசெய்யனுமா? இதோ சில வீட்டு வைத்தியங்கள்
பல் வலி என்பது எல்லாருக்கும் தாங்க முடியாத வேதனையை அளிக்கக்கூடிய விஷயமாகும். பல்வலி வந்தால் அவ்வளவு சீக்கிரம் சாதாரணமாக நிற்காது.
தீராத பல் வலி உங்க தூக்கத்தையும், அன்றாட வேலைகளையும் பாதிக்கக் கூடும். எனவே இதை எப்படி எளிய வீட்டு வைத்திய முறைகள் மூலம் சரி செய்ய முடியும் .
அந்தவகையில் பல்வலியில் இருந்து தப்பிக்க என்ன பண்ணலாம் என்பதை பற்றி பார்ப்போம்.
- கிராம்பு பற்களில் உள்ள நரம்புகள் உணர்ச்சி இழக்கவும் வலியில் இருந்து நிவாரணம் பெறவும் உதவுகிறது. நேரடியாக நாம் கிராம்பை வாயில் வைத்து மெல்லலாம். இதன் மூலம் அதன் எண்ணெயானது பற்களை போய் சேரும். அல்லது ஒரு பருத்தி பஞ்சில் கிராம்பு எண்ணெயை சில துளிகள் இட்டு அதை பல் வலிக்கும் இடத்தில் தேய்க்கலாம்.
- பல் வலி ஏற்படும்போது உங்கள் வாயை வெது வெதுப்பான உப்பு நீரில் கழுவுதல் என்பது உங்களுக்கு நல்ல பலனளிக்கும்.
- பல் வலிக்கு ஐஸ் கட்டியை பயன்படுத்தலாம். ஐஸை ஒரு பேக்கில் வைத்து ஒத்தடம் கொடுக்கலாம். 15 நிமிடங்கள் இப்படி ஒத்தடம் கொடுக்கலாம். வலி மிகுந்த இடத்தில் ஐஸ் கட்டியை பயன்படுத்தும் போது அது வலியை குறைக்க உதவுகிறது.
- பூண்டை அரைத்து அதை பேஸ்ட் போல செய்து பற்களில் தடவி கொள்ளலாம். அல்லது பூண்டை வாயில் வைத்து கிராம்பு போலவே மெல்லலாம். அதிக பல் வலியை கொண்டவர்கள் பூண்டு எண்ணெயை பாதிக்கப்பட்ட இடத்தில் பயன்படுத்தலாம்.
- உங்கள் பற்களில் அல்லது ஈறுகளில் வலி ஏற்படும்போது சூடான புதினா தேநீர் அதற்கு நிவாராணம் அளிக்கலாம். இது உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளில் ஏற்படும் வலியை குறைக்க உதவுகிறது.
- பல்வலிக்கு ஒரு பருத்தி பஞ்சில் சில துளிகள் தைம் எண்ணெயை விட்டு அதில் சிறிது தண்ணீரையும் கலக்கவும். பிறகு வாயில் பாதிக்கப்பட்ட பகுதியில் அதை தடவவும். தைம் உங்கள் வாயில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அகற்றவும் தொற்றுநோயை குறைக்கவும் உதவுகிறது.
- ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூளில் சில சொட்டுக்கள் நீர் சேர்த்து அதை பேஸ்ட் போல கலக்கவும். இப்போது அதை நேரடியாக உங்கள் வாயில் பாதிக்கப்பட்ட பகுதியில் தடவலாம். பிறகு 5 முதல் 10 நிமிடங்கள் வரை வாயில் வைத்திருந்துவிட்டு வாய் கொப்பளிக்கலாம். இது எளிதானது மற்றும் உங்கள் பல் வலியை தற்காலிகமாக குறைக்க உதவுகிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.