தீராத இருமலை போக்கும் கசாயம்... குளிர் காலத்தில் செய்து குடிங்க
Cold Fever
Cough
By Kirthiga
பொதுவாகவே குளிர் காலம் வந்து விட்டாலே அனைவருக்கும் சளி, இருமல் மற்றும் தடிமன் போன்ற பிரச்சினைகள் அனைத்தும் வந்து விடும்.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் பனியால் பலரும் சளி மற்றும் இருமல் பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். வீட்டில் ஒருவருக்கு வந்துவிட்டாலே அனைவருக்கும் பரவி விடும்.
இவ்வாறு பரவினாலுமே உடனடியாக நீக்குவதற்கு சிறந்தது என்றால் அது வீட்டு வைத்தியமாக தான் இருக்கும்.
ஆகவே வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சளி மற்றும் இருமலை விரட்டும் கசாயம் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
-
இஞ்சி - ஒரு துண்டு
-
துளசி - அரை கைப்பிடி
- தேன் - 3 ஸ்பூன்
செய்முறை
-
முதலில் இஞ்சியை நன்கு இடித்து சாற்றை தனியாக எடுத்துக்கொள்ளவும்.
- அடுத்து துளசியை இடித்து அதன் சாற்றையும் தனியாக எடுத்துக்கொள்ளவும்.
- இறுதியாக பிழிந்து வைத்த இரண்டு சாற்றையும் ஒன்றாக சேர்த்து, அதில் தேன் சேர்த்து அப்படியே குடிக்கலாம்.
எவ்வளவு குடிக்க வேண்டும்?
-
ஒரு வயது முடிந்த குழந்தைகள் அரை ஸ்பூன் குடிக்கலாம்.
-
3-5 வயது குழந்தைகள் 1 ஸ்பூன் குடிக்கலாம்.
-
5-8 வயது குழந்தைகள் 2 ஸ்பூன் குடிக்கலாம்.
-
8-12 வயது குழந்தைகள் 3 ஸ்பூன் குடிக்கலாம்.
- நடுத்தர வயது கொண்டவர்கள் கால் டம்ளர் குடிக்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US