White Hair Remedy: நரைமுடியை கருப்பாக இயற்கை வைத்தியம்- 2 பொருள் போதும்
இயற்கையான முறையில் எவ்வித ரசாயனங்களும் இல்லாமல் நரைமுடி பிரச்சனைக்கான தீர்வு குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மன அழுத்தம், தூக்கமின்மை, துரித உணவுகளின் பயன்பாடு, ஆரோக்கியமற்ற உணவுகள் போன்ற பல காரணங்களால் இன்றைய தலைமுறையினருக்கு இளம் வயதிலேயே நரைமுடி பிரச்சனை ஏற்படுகிறது.
இதற்காக பலரும் பலவித செயற்கையான ரசாயன பொருட்களை பயன்படுத்துகின்றனர், இதனால் தற்காலிக தீர்வு கிடைத்தாலும் பல பக்கவிளைவுகளை உண்டு பண்ணுகிறது.
இந்த பதிவில் மிக எளிதாக வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே நரைமுடிக்கு தீர்வை பெறலாம்.
இதற்கு நீங்கள் பயன்படுத்த வேண்டிய பொருட்கள் மருதாணி மற்றும் காபி கலவை.
இயற்கையான ஹேர் டையான மருதாணியை காபி-யுடன் சேர்த்து கலந்து பயன்படுத்தும் போது கருப்பு நிறத்தை வழங்குகிறது.
இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள் கூந்தலுக்கு வலிமை சேர்த்து முடி வளர்ச்சியையும் தூண்டுகிறது.
பயன்படுத்தும் முறை
1 கப் தண்ணீரில் 2 அல்லது 3 டீஸ்பூன் காபி தூளை கலந்து கொதிக்க வைக்கவும், கஷாயம் போன்று மாறியதும் ஆற விடவும்.
இதனுடன் 100 கிராம் மருதாணி தூள் சேர்த்து பேஸ்டாக்கி கொள்ளவும்.
இந்த கலவையை 2 அல்லது 3 மணிநேரம் அல்லது இரவு முழுவதும் அப்படியே வைத்துவிடவும், இதன் பின்னர் முடியில் தேய்த்து பின்னர் சாதாரண தண்ணீரில் கழுவவும்.
மறுநாள் ஷாம்பு பயன்படுத்தலாம்.