வயிற்றை எளியமுறையில் சுத்தம் செய்ய வேண்டுமா?
Constipation
By Kishanthini
ஒருவரது வயிறு ஆரோக்கியமாக இருந்தால் தான், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் முறையாக கிடைக்கும்.
அதற்கு முதலில் வயிற்றில் உள்ள குடல் சுத்தமாக இருக்க வேண்டும். தற்போதைய உணவுப் பழக்கத்தால் குடல் பகுதியில் நச்சுக்கள் அதிகம் சேர்கின்றன.
இதனால் பலர் செரிமான பிரச்சனைகளை சந்திப்பதோடு, ஊட்டச்சத்து குறைபாடுகளையும் சந்திக்கின்றனர். இதைத் தவிர்க்க வேண்டுமானால், அவ்வப்போது குடலை சுத்தம் செய்ய வேண்டும்.
அந்தவகையில் எளிய முறையில் வயிற்றை சுத்தம் செய்ய அருமையான வீட்டு வைத்தியம் ஒன்றை இங்கே பார்ப்போம்.
- காலை எழுந்தவுடன் ஒரு பாத்திரத்தில் மூன்று லிட்டர் தண்ணீர் கொதிக்க வைக்கவும். பிறகு நன்கு கொதித்த அந்த தண்ணீரில், மூன்று எலுமிச்சை பழங்களை பிழிந்து விடுங்கள்.
- அதனுடன் மூன்று ஸ்பூன் கல்உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். வெதுவெதுப்பாக வெறும் வயிற்றில் ஒரு அரை லிட்டர் தண்ணீரை குடிக்க வேண்டும்.
- தண்ணீர் உள்ளே சென்ற சிறிது நேரத்தில் கழிவறை செல்லத் தூண்டும். இல்லையெனில், பத்து நிமிடம் கழித்து, மேலும் சிறிதளவு தண்ணீரை அருந்தவும்.
- ஐந்து நிமிடங்களில் கழிவறை செல்வது நிச்சயம். சென்று வந்துடன், மீண்டும் எலுமிச்சை உப்பு நீர் கலவையை எவ்வளவு குடிக்க முடியுமோ அவ்வளவு அருந்துங்கள்.
- சில நிமிடங்களில், மறுபடியும் மலம் கழியும். இதேபோல் நான்கு, ஐந்து முறை இந்த கலவையை முடிந்த அளவு அருந்தினால், அத்தனை முறையும் கழிவறை செல்வது நிச்சயம்.
- இந்த முறையில் வயிறு இயற்கையான முறையில் சுத்தம் செய்யப்படும். குடல் வலுப்பெறும். சாப்பிடும் உணவு உடம்பில் தங்கும். நன்கு செரிமானம் ஆகும்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US