உடம்புல வெள்ளையா தேமல் இருக்கா? இத மட்டும் ட்ரை பண்ணுங்க!
Diabetes
By Kirthiga
மனித உடம்பில் முக்கியமான ஒரு உறுப்பு என்றால் அது தோல் தான். உள் உறுப்புகளை வெயில், காற்று மற்றும் கிருமிகள் ஆகியவற்றிடமிருந்து வரும் பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்கும்.
அதே காரணத்தால் தோல் அதிகமாக தாக்கப்பட்டு பல்வேறு நோய்களும் வரவும் காரணமாகிவிடுகிறது. நோய்களில் முதன்மையாக உலகமெங்கும் வரும் ஒரு நோய் பூஞ்சை.
இந்த நோயானது எதனால் ஏற்படுகின்றது மற்றும் இதை எப்படி வீட்டு வைத்தியம் மூலம் தீர்க்கலாம் என இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.
காரணங்கள்
-
ஊட்டச்சத்து பற்றாக்குறை மோசமான நோய் எதிர்ப்பு சக்திக்கு வழிவகுக்கிறது, தொற்றுக்கு அதிக வாய்ப்பு ஏற்படுத்துகிறது.
- மோசமான சுகாதாரம், மோசமான வாழ்க்கை நிலைமைகள், அதிகப்படியான வியர்த்தல், சூடான மற்றும் ஈரப்பதமான காலநிலை - இதனால் அதிகப்படியான வியர்வை, கிருமிகள், அழுக்கு, ஈரமான தோல் - பூஞ்சை நன்றாக வளர வழிவகுக்கும்.
- பலவீனப்படுத்தும் / நாள்பட்ட நோய்கள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு.
-
ஹோர்மோன் மாற்றங்கள்
-
நீரிழிவு - நீரிழிவு நோயாளிகள் பொதுவாக தோல் நோய்களுக்கு ஆளாகிறார்கள்.
- கார்டிகோஸ்டீராய்டுகள் பயன்படுத்துதல் நோயெதிர்ப்பு சக்தியை ஒடுக்கும். அதனால் பூஞ்சை நோய் அதிகரிக்கும்.
வீட்டு வைத்தியம்
- அருகம்புல், கஸ்தூரிமஞ்சள், மருதாணி இலை போன்றவற்றை அம்மியில் வைத்து அரைத்து பூச தேமல் குறையும்.
-
எலுமிச்சை தோலை உலர்த்தி தூளாக்கி சம அளவு பொரித்த படிகாரத்தை சிறிது தண்ணீர் சேர்த்து குழைத்து தேமலில் பூசி குளித்து வந்தால் தேமல் குறையும். மஞ்சளை இடித்து நல்லெண்ணெயில் காய்ச்சி தேமல் மேல் தேய்த்து வந்தால் தேமல் குறையும்.
-
குப்பை மேனி இலைகளுடன் மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து அரைத்து தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வர தேமல் குறையும்.
- மலைவேம்பு இலைகளை அரைத்து அதன் சாறை தேமல் மீது பூசி வந்தால் தேமல் மற்றும் அரிப்பு குறையும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US