வீட்டை புதுப்பிக்கும் பணியின்போது பிரான்ஸ் தம்பதியருக்கு கிடைத்த பெட்டி: அதற்குள் என்ன இருந்தது தெரியுமா?
பிரான்சில் தங்கள் வீட்டை புதுப்பித்த தம்பதியருக்கு பெரும் புதையல் ஒன்று கிடைத்துள்ளது.
மேற்கு பிரித்தனியிலிருக்கும் அந்த வீட்டின் உரிமையாளரான Francois Mion, வீட்டை புதுப்பிக்கும் பணியின்போது, பணியாட்கள் செங்கல்களுக்கு நடுவே ஒரு உலோகப்பெட்டியைக் கண்டுபிடித்ததாக தெரிவிக்கிறார்.
அதை திறந்து பார்க்கும்போது அதற்குள் தங்க நாணயங்கள் இருந்ததைக் கண்டு ஆச்சரியமடைந்துள்ளார்கள் அனைவரும். சில நாட்களுக்குப் பின்பு, மேலும் ஒரு இடத்தில் ஒரு பைக்குள் இன்னும் சில தங்க நாணயங்கள் கிடைக்க, அவர்களிடம் தற்போது 239 தங்க நாணயங்கள் உள்ளன.
அவை தற்போது ஏலம் விடப்பட உள்ளன. அவை 250,000 யூரோக்கள் முதல் 300,000 யூரோக்கள் வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த தொகையை வீட்டின் உரிமையாளர்களும், பணியாட்களும் தங்களுக்குள் பங்கிட்டுக்கொள்ள முடிவு செய்துள்ளார்கள்.
பிரான்ஸ் சட்டப்படி, இதுபோல் கிடைக்கும் புதையல் எல்லாம் அரசுக்கு சொந்தமாகும். ஆனால், 2016க்குப் பிறகு வாங்கப்பட்ட நிலத்தில் கண்டு பிடிக்கப்பட்ட புதையல்களுக்குத்தான் இந்த சட்டம் பொருந்தும்.
ஆனால், இந்த வீட்டைப் பொருத்தவரை, அதன் உரிமையாளர்கள் அதை 201இலேயே வாங்கிவிட்டதால், அந்த புதையலை அவர்களே எடுத்துக்கொள்ளலாம்.
ஆனால், இந்த வீட்டைப் பொருத்தவரை, அதன் உரிமையாளர்கள் அதை 201இலேயே வாங்கிவிட்டதால், அந்த புதையலை அவர்களே எடுத்துக்கொள்ளலாம்.