முதலில் நிதியமைச்சர்... தற்போது இவர்: தடுமாறும் பிரதமர் லிஸ் ட்ரஸ் அமைச்சரவை
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆட்சிக்கு வந்த லிஸ் ட்ரஸ், தொடக்கத்திலேயே தடுமாறி வருகிறார்.
புதிய உள்விவகார அமைச்சராக ரிஷி சுனக்கின் வட்டத்தில் இருப்பவரான Grant Shapps நியமிக்கப்படுவார்
பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸ் தமது ஆட்சியை தக்கவைக்க போராடும் நிலையில், தற்போது உள்விவகார அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேனை பதவியில் இருந்து நீக்கியுள்ளார்.
பிரித்தானியாவின் புதிய பிரதமர் லிஸ் ட்ரஸ் தமது ஆட்சியை தக்கவைக்க கடுமையாக போராடி வருகிறார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆட்சிக்கு வந்த லிஸ் ட்ரஸ், தொடக்கத்திலேயே தடுமாறி வருகிறார்.
ஆட்சிக்கு வந்து 50 நாட்களேயான நிலையில், முதலில் நிதியமைச்சர் Kwasi Kwarteng- ஐ நீக்கினார், தற்போது உள்விவகார அமைச்சரை நீக்கியுள்ளார். புதிய உள்விவகார அமைச்சராக ரிஷி சுனக்கின் வட்டத்தில் இருப்பவரான Grant Shapps நியமிக்கப்படுவார் என்றே கூறப்படுகிறது.
பிரதமர் லிஸ் ட்ரஸ் Hertfordshire செல்ல திட்டமிடப்பட்டிருந்த நிலையில், திடீரென்று அந்த பயணம் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து, எந்த விளக்கமும் பிரதமர் அலுவலகத்தில் இருந்து வெளியாகாத நிலையில், தற்போது உள்விவகார அமைச்சர் Suella Braverman-ஐ பொறுப்பில் இருந்து நீக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
CREDIT: Aaron Chown
முன்னாள் அட்டர்னி ஜெனரலான Suella Braverman லிஸ் ட்ரஸ் பிரதமராக பொறுப்பேற்ற பின்னர், உள்விவகார அமைச்சர் பிரிதி படேலுக்குப் பதிலாக பொறுப்பேற்றார்.
உள்விவகார அமைச்சர் Suella Braverman பதவி நீக்கம் என்பது லிஸ் ட்ரஸ் அரசுக்கு மேலும் சிக்கலையே ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.