விரைவில் அமுலுக்கு வரும் புலம்பெயர்தல் கட்டுப்பாடுகள்: அறிவிப்பு வெளியிட்டார் உள்துறைச் செயலர்

United Kingdom
By Balamanuvelan Jan 30, 2024 02:31 PM GMT
Report

கடந்த ஆண்டு பிரித்தானியாவுக்கு சட்டப்படி புலம்பெயர்ந்தவர்கள் 300,000 பேர். ஆனால், இந்த ஆண்டு அத்தனை பேர் பிரித்தானியாவுக்கு வருவது சாத்தியமில்லை.

பிரித்தானியாவின் சட்டப்பூர்வ புலம்பெயர்தல் அமைப்பை மாற்றியமைத்தல், எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துதல் மற்றும் அளவுக்குமீறிய புலம்பெயர்தலைக் குறைத்தல் தொடர்பான நடவடிக்கைகள், இன்னும் சில வாரங்களுக்குள் அமுலுக்கு வரும் என பிரித்தானிய உள்துறைச் செயலாளர் இன்று அறிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஏராளமானோர் பிரித்தானியாவுக்கு வருவது சாத்தியமில்லை

முன்னர் சட்டவிரோத புலம்பெயர்வோர் எண்ணிக்கையைத் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த பிரித்தானிய அரசு, தற்போது, சட்டப்படி புலம்பெயர்வோர் எண்ணிக்கையையும் கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது.  

அது தொடர்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் குறித்து பிரித்தானிய பிரதமரும் உள்துறைச் செயலரும் டிசம்பரில் அறிவுப்புகள் வெளியிட்டிருந்தார்கள்.

புலம்பெயர்தல் அமைப்பை தவறாக பயன்படுத்தி பிரித்தானியாவுக்கு வர முயல்வோரைக் கட்டுப்படுத்தும் விதிகள் மார்ச் மாத துவக்கம் முதல் நடைமுறைக்கு வர உள்ளன.

விரைவில் அமுலுக்கு வரும் புலம்பெயர்தல் கட்டுப்பாடுகள்: அறிவிப்பு வெளியிட்டார் உள்துறைச் செயலர் | Home Secretary Underlines Commitment Net Migration AP

ஆக, கடந்த ஆண்டு பிரித்தானியாவுக்கு சட்டப்படி புலம்பெயர்ந்தவர்கள் 300,000 பேர். இந்த ஆண்டு அத்தனை பேர் பிரித்தானியாவுக்கு வருவது சாத்தியமில்லை என்பது தெளிவாகிறது.  

என்னென்ன கட்டுப்பாடுகள்? 

மார்ச் மாதம் 11ஆம் திகதி முதல், முதியவர்கள், நோயாளிகளை கவனித்துக்கொள்ளும் பணி செய்வோர், தங்கள் குடும்பத்தினரை பிரித்தானியாவுக்கு அழைத்துவர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.

ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி முதல், திறன்மிகுப் பணியாளர்கள் விசாவில் வருபவர்களுக்கான குறைந்தபட்ச வருமான வரம்பு, 26,200 பவுண்டுகளில் இருந்து 38,700 பவுண்டுகளாக உயர்த்தப்பட உள்ளது.

ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி முதல், குடும்ப விசா பெறுவதற்கான குறைந்தபட்ச வருமான வரம்பு 29,000 பவுண்டுகளாக உயர உள்ளதுடன், அது படிப்படியாக அதிகரிக்கவும் உள்ளது.

மேலும், நாளை, அதாவது, ஜனவரி மாதம் 31ஆம் திகதி முதல், உலகின் பிற பகுதிகளுடன் பிரித்தானியா எவ்வாறு வர்த்தகம் செய்கிறது என்பதிலும் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. வர்த்தகம் செய்வதை எளிதாக்கும் வகையில், விசிட்டர் விசாவில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

இதற்கிடையில், ஏற்கனவே, மாணவர் விசாக்களுக்கான மாற்றங்கள், ஜனவரி மாத துவக்கத்திலேயே நடைமுறைக்கு வந்துவிட்டன. அதன்படி, முதுகலை ஆராய்ச்சிப் படிப்பு படிக்கும் மாணவர்கள் அல்லது அரசின் நிதி உதவி மூலம் ஸ்காலர்ஷிப் பெறும் பாடப் பிரிவில் பயிலும் மாணவர்கள் மட்டுமே தங்கள் குடும்பத்தினரை தங்களுடன் வாழ பிரித்தானியாவுக்கு அழைத்துவரமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

 

மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US