வீடற்றவர் தூக்கத்திலேயே உடல் உறைந்து மரணமடைந்த துயரம்: பிரித்தானியாவில் சம்பவம்
பிரித்தானியாவில் வீடற்ற நபர் ஒருவர், கடும் குளிரில் இருந்து தப்புவதற்காக காரில் உறங்கிய நிலையில், உடல் உறைந்து இறந்துவிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
வெப்பநிலை -10 டிகிரி
பிரித்தானியாவில் வெப்பநிலை -10 டிகிரி என சரிவடைந்ததை அடுத்தே அந்த நபர் இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த நிலையில், பூட்டப்பட்டிருந்த காரில் இருந்து அந்த நபரின் சடலத்தை மீட்டெடுக்க தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினனர் உதவியதாக தெரியவந்துள்ளது.
@reuters
தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார், பனியால் மூடியிருந்த அந்த கருப்பு நிற காருக்கு அருகாமையில் காணப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
சம்பவம் நடந்த பீஸ்டன் பகுதியில் வசிப்பவர்கள் தெரிவிக்கையில், அந்த நபர் குளிரில் இருந்து தப்புவதற்காக காருக்குள் தஞ்சமடைந்துள்ளார் என கூறியுள்ளனர். மட்டுமின்றி, நகர நிர்வாகமும், அந்த நபரின் இக்கட்டான நிலை குறித்து அறிந்திருந்ததாகவே கூறப்படுகிறது.
சமூகம் அக்கறையற்று போனதா
அந்த நபருக்கு உதவும் வகையில் அப்பகுதி மக்கள் பலமுறை முயன்றதாக சமூக ஊடக பக்கத்தில் ஒருவர் பதிவு செய்துள்ளார். அவரது இறப்பு கொடூரமானது என்றும் ஒருவர் பதிவு செய்துள்ளார்.
Credit: ashley
மேலும், பிரித்தானியாவில் வீடற்ற ஒரு நபர் தெருவில் உறைந்து இறந்து போகும் அளவுக்கு சமூகம் அக்கறையற்று போனதா எனவும் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனிடையே, நாட்டிங்ஹாம்ஷயர் பொலிசார் விசாரணை முன்னெடுத்துள்ளதுடன், அப்பகுதியில் மதியத்திற்கு மேலும் காணப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த நபரின் மரணம் துயரமானது என குறிப்பிட்டுள்ள அதிகாரிகள், இது ஒரு மர்ம மரணமாக கருதவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |