தெருவில் தூங்கியவருக்கு அடித்த ஜாக்பாட்., வாழ்க்கையை தலைகீழாக திருப்பிப்போட்ட சம்பவம்
அமெரிக்காவில் வீடின்றி தெருவில் வாழ்ந்து வந்த ஒருவருக்கு லொட்டரியில் ஜாக்பாட் அடித்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் சான் லூயிஸ் ஒபிஸ்போவில், தெருவில் வசித்து வந்த ஒரு ஓர் பணமில்லாத நபர், திடீரென 1 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள லொட்டரியை வென்றுள்ளார்.
1 மில்லியன் அமெரிக்க டொலர் என்பது இலங்கை பணமதிப்பில் கிட்டத்தட்ட ரூ.30 கொடியாகும்.
இந்த அதிர்ஷ்டம், Sandy’s Deli - Liquor என்ற கடையில் ஏற்பட்டது. அங்கு கடை மேலாளராக உள்ள Wilson Samaan கூறுகிறார்:
"அவர் வந்து லொட்டரி சீட்டை கீறி பார்த்தவுடன் 'ஓம் மை காட், இது உண்மையா?' எனக் கேட்டார். நாங்கள் சரிபார்த்தபோது, அது ஒரு மில்லியன் டொலர் பரிசு என்பதை உறுதிப்படுத்தினோம். அவர் கண்ணீருடன், ‘நான் இனி இடமின்றி உறங்க வேண்டியதில்லை’ என்றார்."
வில்சன் அந்த நபரை நேரில் Fresno நகரத்திற்கே காரில் அழைத்து சென்று பரிசு தொகையை பெறச் செய்துள்ளார், ஏனெனில் அந்த அளவுக்கு மதிப்புள்ள சீட்டை தபால் மூலம் அனுப்புவது அபாயகரமென அவர் எண்ணினார்.
இது குறித்து California Lottery-யின் செய்தித்தொடர்பாளர் Carolyn Becker கூறுகையில்:
"இந்த அளவிலான பரிசு பெற்றவர்கள் பல்வேறு சட்ட நடவடிக்கைகள் மற்றும் சரிபார்ப்புகளை எதிர்கொள்வார்கள். மாதத்திற்கு 10,000-க்கும் மேற்பட்ட பரிசு கோரிக்கைகள் வருவதால், இது நேரம் எடுத்துக் கொள்கிறது."
வென்றவர் தற்போது வீடு வாங்க, கார் வாங்க, மற்றும் மீதமுள்ள தொகையை முதலீடு செய்து சேமிக்க திட்டமிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |