கிடுகிடுவென முடிவளர்ச்சியை அதிகரிக்க இந்த ஒரே ஒரு பொருள் போதும்: இப்படி செஞ்சி பயன்படுத்துங்கள்
தலைமுடிக்கு சரியான பராமரிப்பு, நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகள், தூக்க நேரம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.
அந்தவகையில் நீண்ட, ஆரோக்கியமான முடியை பராமரிக்க இயற்கையான பொருட்களின் பயன்படுத்த வேண்டும்.
தலைமுடி வளர்ச்சியை வேகமாக அதிகரிக்க கற்றாழை பயன்படுத்தி ஹேர் சீரம் எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ரோஸ் வாட்டர்- 1 ஸ்பூன்
- கற்றாழை ஜெல் - 1 ஸ்பூன்
- தண்ணீர் - 4 ஸ்பூன்
- வைட்டமின் ஈ - 1
செய்முறை
முதலில் ஒரு சின்ன பாத்திரத்தில் 50ml அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
பின் அதில் ரோஸ் வாட்டர், கற்றாழை ஜெல், வைட்டமின் ஈ கேப்ஸுல் சேர்த்து கலக்கவும்.
istock
ஒன்றுடன் ஒன்று நன்கு கலக்கும்படி கலந்து விட்டு, பின்பு இந்த சீரமை பயன்படுத்தலாம்.
இந்த சீரமை குளிப்பதறகு முன்பு, குளித்த பின் என எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
கிடைக்கும் நன்மைகள்
கற்றாழையில் உள்ள புரோட்டியோலைடிக் என்சைம் தலையில் உள்ள இறந்த செல்களை நீக்கி மயிர்கால்களுக்கு சக்தியை கொடுக்கும்.
கற்றாழையில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு பொடுகு மற்றும் வறண்ட சருமத்தை போக்கி ஆரோக்கியமான சருமத்தை கொடுக்கிறது.
மேலும், இது கூந்தல் உதிர்வை குறைத்து முடி அடர்த்தியாக வளர பயன்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |