வெயிலில் முகம் கருப்பாகாமல் இருக்க உதவும் இயற்கை Toner: வீட்டிலேயே தயாரிக்கலாம்
அதிகப்படியான சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் நமது உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.
இயற்கையான முறையில் முகம் மற்றும் உடலை பளபளப்பாகவும் பொலிவாகவும் இந்த Toner-ஐ பயன்படுத்துங்கள்.
அந்தவகையில், இயற்கயான முறையில் முகத்தை பொலிவாக்க உதவும் கற்றாழை Toner-ஐ எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கற்றாழை- 1 துண்டு
- ரோஜா இதழ்- 1 கைப்பிடி
- வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் - 1
தயாரிக்கும் முறை
முதலில் கற்றாழையை நன்கு கழுவி தோல் சீவி அதன் ஜெல்லை மட்டும் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
அடுத்து இந்த ஜெல்லை சுத்தமாக 2 முறை நன்கு கழுவி எடுத்துக்கொள்ளவும்.
பின் இந்த கற்றாழை ஜெல் மற்றும் ரோஜா இதழ்களை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இறுதியில் இதில் வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் 3 சொட்டு சேர்த்து கலந்து ஓரு டப்பாவில் போட்டு ஃபிரிட்ஜில் வைத்து 1 வாரம் வரை பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் முறை
முதலில் குளிர்ந்த நீரைக் கொண்டு முகத்தை நன்கு சுத்தம் செய்யவும்.
பின்னர் டோனரை காட்டன் துணி கொண்டு முகம் மற்றும் கழுத்து பகுதி முழுவதும் தடவவும்.
இதனை போட்டபின் மாய்ஸ்சரைசர் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இதனை தொடர்ந்து பயன்படுத்தி வர சருமம் இறுக்கமடையும். வெயிலில் ஏற்படும் கருமை, தோல் காயத்தையும் விரைவாக குணப்படுத்தும், முகப்பருக்கள் குறையும்.
மேலும், சென்சிட்டிவ் சருமத்தில், முகப்பரு வருவதை தடுக்கவும், வீக்கம், சிவத்தல், அரிப்பு மற்றும் சொறி ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கவும் உதவுகிறது.
குறிப்பாக, சருமம் ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும், இளமையாகவும் தோன்றும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |