முகப்பொலிவை அதிகரிக்க உதவும் ஆயுர்வேத பேஸ்பேக்.., எப்படி பயன்படுத்துவது?
பொதுவாக அனைவரும் முகத்தினை பொலிவாக வைத்துக்கொள்ள தான் விரும்புவார்கள்.
இருப்பினும் சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் நமது உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.
அந்தவகையில், முகப்பொலிவை அதிகரிக்க உதவும் ஆயுர்வேத பேஸ்பேக்கை எப்படி தயாரித்து பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- தேன்- 2 ஸ்பூன்
- மஞ்சள்- 1 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் மஞ்சள் தூள் மற்றும் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
இந்த கலவை பொலிவிழந்த மற்றும் சீரற்ற சருமத்தைக் கொண்டவர்களுக்கு ஏற்றது.
2. தேவையான பொருட்கள்
- முல்தானி மெட்டி - 1 ஸ்பூன்
- சந்தன- 1 ஸ்பூன்
- ரோஸ் வாட்டர்- 5 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் முல்தானி மெட்டி, சந்தன பவுடரை எடுத்து கொள்ள வேண்டும்.
பின் அதில் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
இந்த கலவை எண்ணெய் பசை சருமத்தினருக்கு ஏற்றது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |