உடனடியாக முகத்தை பொலிவாக்க இந்த ஒரு பொருள் போதும்.., என்ன தெரியுமா?
முகத்தில் பருக்கள் உண்டான பிறகு ஏற்படும் கரும்புள்ளிகள் முகத்தின் அழகை கெடுக்கும் விதமாக உள்ளன.
சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் நமது உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.
அந்தவகையில், சருமத்தின் நிறத்தை அதிகரிக்க உதவும் பீட்ரூட்டை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பீட்ரூட்- 1
- தேன்- 1 ஸ்பூன்
- தயிர்- 1 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் பீட்ரூட் சாறை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதனுடன் தேன் மற்றும் தயிரை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு இவற்றை முகத்தில் தடவி, 15 நிமிடம் அப்படியே உலர வைக்க வேண்டும்.
இதற்கடுத்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
இதனை வாரம் 1-2 முறை பயன்படுத்தினால், முகம் பளிச்சென்றும், பிரகாசமாகவும் இருக்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |