இறந்த சரும செல்களை நீக்க 5 வகையான Body scrubs: இயற்கை முறையில் தயாரிப்பது எப்படி?
இறந்த சரும செல்கள் தோலின் மேற்புறத்தில் ஒட்டிக்கொண்டு இருக்கும், இதனால் சில தோல் பராமரிப்பு பிரச்சனைகள் ஏற்படும்.
இந்த இறந்த சரும செல்கள் உடலை பாதிக்கத் தொடங்கும் முன் இதை அகற்றுவது முக்கியம்.
இதை நீக்காமல் அப்படியே முகத்தில் அல்லது உடலில் இருந்தால் அது நமது நிறத்தையும் தோலின் அமைப்பையும் பாதிக்கும்.
Ani Dimi/Stocksy
இயற்கைமுறையில் தயாரிக்கப்படும் இந்த 5 வகையான Body scrubsஐ பயன்படுத்தி உடலில் இருக்கும் இறந்த சரும செல்கள் மற்றும் பருக்கள் போன்றவற்றை போக்கலாம்.
பாசி பயிறு மாவு 1கப் பாசி பயிறு மாவு, 1/2 கப் கடலை மாவு,2 ஸ்பூன் அரிசி மாவு, ரோஸ் வாட்டர் போட்டு கலந்து உடலில் scrub செய்யலாம்.
மசூர் பருப்பு மாவு மசூர் பருப்பு மாவு 1கப் ,1 ஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து உடலில் scrub செய்யலாம்.
பச்சரிசி மாவு பச்சரிசி மாவு 1கப் ,வேப்பம்பொடி 1 ஸ்பூன், தண்ணீர் சேர்த்து உடலில் scrub செய்யலாம்.
ரோஸ் மாவு காய்ந்த ரோஸ் பொடி- 1 கப், சந்தன பொடி 2 ஸ்பூன், வெட்டி வேறு சிறிதளவு, பச்சரிசி மாவு சிறிதளவு, இதனை கொரகொரப்பாக அரைத்து உடலில் scrub செய்யலாம்.
ஆவாரம்பூ Scrubs ஆவாரம்பூ, காட்டு வேப்பிலை, ஓட்ஸ், சந்தன போடி,மஞ்சள் தூள்,தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து உடலில் scrub செய்யலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |