கட்டுக்கடங்காத கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் தேங்காய் பால்.., எப்படி தயாரிப்பது?
பொதுவாக, பெண்களுக்கு முடி உதிர்தல், வறண்ட முடி போன்ற பல பிரச்சனைகள் இருக்கும்.
தலைமுடிக்கு சரியான பராமரிப்பு, நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகள், தூக்க நேரம் போன்றவற்றை முறையாக மேற்கொள்ள வேண்டும்.
அந்தவகையில், கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க தேங்காய் பாலை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- தேங்காய் பால்- 1 கப்
- தயிர்- 3 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் கெட்டியான தேங்காய் பால், தயிர் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
பின் இதனை தலைமுடியின் உச்சந்தலை முதல் நுனி வரை நன்கு தடவி அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

அடுத்து கூந்தலை மென்மையான ஷாம்பு கொண்டு குளிர்ந்த நீரால் அலசிக்கொள்ளலாம்.
இந்த கலவையை தொடர்ந்து வாரத்திற்கு ஒரு முடி கூந்தலுக்கு பயன்படுத்தி வர கூந்தல் நன்கு நீளமாகவும், அடர்த்தியாகவும் வளரும்.
2. தேவையான பொருட்கள்
- தேங்காய் பால்- 1 கப்
- முட்டை- 1
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் கெட்டியான தேங்காய் பால், முட்டை சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
பின் இதனை தலைமுடியின் உச்சந்தலை முதல் நுனி வரை நன்கு தடவி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
அடுத்து கூந்தலை மென்மையான ஷாம்பு கொண்டு அலசிக்கொள்ளலாம்.
இதனை தொடர்ந்து பயன்படுத்தி வர இரத்த ஓட்டத்தைத் தூண்டி, முடி வளர்ச்சிக்கும், ஒட்டுமொத்த கூந்தல் ஆரோக்கியத்திற்கும் உதவும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |