வறண்ட கூந்தலை பட்டுப் போன்று மென்மையாக்க உதவும் இயற்கை வீட்டு வைத்தியம்
பலருக்கும் முடி மென்மையாக இல்லாமல் வறண்டு காணப்படும்.
இயற்கையான வீட்டு வைத்தியங்களை பயன்படுத்துவதன் மூலம் கூந்தலை மென்மையாக மாற்றலாம்.
அந்தவகையில், பட்டுபோன்ற மென்மையான கூந்தலை பெற உதவும் இயற்கை வீட்டு வைத்தியம் குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கற்றாழை- 1 துண்டு
- தேங்காய் எண்ணெய்- 2 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் கற்றாழையை எடுத்து நன்கு கழுவி அதன் ஜெல்லை தனியாக பிரித்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு கிண்ணத்தில் கற்றாழை ஜெல் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து மென்மையாக வரும்வரை கைவிடாமல் நன்கு கலக்கவும்.

இப்போது இந்த கலவையை தலைமுடியின் உச்சந்தலை முதன் முடியின் நுனி வரை தடவவும்.
பின்னர் அரை மணி நேரம் அப்படியே விட்டுவிட்டு மென்மையான ஷாம்பு கொண்டு கழுவிக்கொள்ளலாம்.
இந்த இயற்கை பேக்கை முடிக்கு தொடர்ந்து பயன்படுத்தி வர வறண்ட தலைமுடி மென்மையாக மாறும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |