இயற்கையான முறையில் நீண்ட கூந்தலை பெற இந்த ஒரு பானம் போதும்: ஈசியா தயாரிக்கலாம்
முடி உதிர்வு என்பது ஆண், பெண் என இருபாலருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனையாகும்.
பலரும் முடி வளரவில்லை என்றாலும் கூட பரவாயில்லை ஆனால் முடி உதிர்வு மட்டும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
மேலும் மன அழுத்தம், மரபணு பரிமாற்றம் மற்றும் ஒழுங்கற்ற தலை முடி பராமரிப்பு இதுபோன்ற காரணங்கள் தான் தலை முடி உதிர்வு பிரச்சினைக்கு வழிவகுக்கிறது.
அந்தவகையில், முடி வளர்ச்சியை அதிகரிக்க இந்த ஒரே ஒரு பானம் போதும். இதனை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கேரட்- ½
- கீரை இலை- 1 கைப்பிடி
- செலரி தண்டு- 1
- கறிவேப்பிலை- 8
- நெல்லிக்காய்- ½
- வெள்ளரி- ½
- இஞ்சி- 1 துண்டு
- ஆப்பிள்- ½
- முருங்கை இலை- சில
- தண்ணீர் எலுமிச்சை- ½
செய்முறை
ஒரு மிக்ஸி ஜாரில் கேரட், கீரை, செலரி, கறிவேப்பிலை, நெல்லிக்காய், வெள்ளரி, இஞ்சி, ஆப்பிள் மற்றும் முருங்கை இலைகள் அனைத்தையும் எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து, அதில் தண்ணீரைச் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
பின் இதை ஒரு டம்ளரில் ஊற்றி, எலுமிச்சை பிழிந்து கலந்து குடித்து வரலாம்.
குறைந்தபட்சம் 3- 6 மாதங்களுக்கு இந்த ஜூஸை தொடர்ந்து பருகி வர முடி உதிர்தலை நிரந்தரமாக நிறுத்தி கூந்தல் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |