கருவளையத்தை நிரந்தரமாக நீக்க உதவும் இயற்கை வீட்டு வைத்தியம்
பெண்களை மிகவும் அழகாக காட்டுவது எப்போதுமே அவர்களது கண்கள் தான்.
ஆனால் சிலருக்கு கண்ணை சுற்றி கருவளையங்கள் தோன்றி சோர்வாக இருப்பதுபோல் தோன்றுகிறது.
அந்தவகையில், முகத்தின் அழகினை கெடுக்கும் கருவளையங்கள் நிரந்தரமாக நீங்க உதவும் இயற்கை வீட்டு வைத்தியம் குறித்து பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- உருளைக்கிழங்கு- 1
- தேன்- 1 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் உருளைக்கிழங்கை அரைத்து அதன் சாறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதில் தேன் சேர்த்து கலந்து, கண்களைச் சுற்றி தடவ வேண்டும்.
அதன் பின் 10 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
2. தேவையான பொருட்கள்
- மஞ்சள்- 1 ஸ்பூன்
- பால்- 4 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் மஞ்சள் தூளை எடுத்து, அத்துடன் பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின் அதை கண்களைச் சுற்றி தடவி 5-10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பிறகு கண்களை குளிர்ச்சியான நீரால் கழுவ வேண்டும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |