புருவத்துல முடியே இல்லையா; அப்போ இத மட்டும் செய்து பாருங்க
புருவங்கள் நம் கண்களின் கிரீடம் போன்றவை.
கண்களுக்கு மேலே உள்ள எலும்பு முகடுகளைப் பாதுகாக்கின்றன மற்றும் முகபாவனைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
ஒரு சிலருக்கு இந்த புருவமுடியானது பெரிதாக வளராது. ஆகவே அதற்காக ஒரு சிலர் சிகிச்சை எடுத்துக்கொள்வார்கள்.
அடர்த்தியான புருவங்களை பெற வேண்டுமா? புருவங்களை தடிமனாக வளர்ப்பது எப்படி என்று யோசிக்கிறீர்களா?
ஆம் எனில், படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
விரும்பக்கூடிய இந்த அடர்த்தியான முடியை பெற்றுக்கொள்ள வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களைக் கொண்டு முயற்சி செய்து பாருங்கள்.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் பொதுவாகவே முடி வளர்ப்பதற்கு உதவும். இது முடிக்கு சிறந்த இயற்கை ஊட்டச்சத்துக்களில் ஒன்றாக இருக்கலாம். ஆகவே தேங்காய் எண்ணெயை சிறிதளவு எடுத்து புருவங்களில் பூசி மசாஜ் செய்ய வேண்டும். இரவு முழுவதும் எண்ணெய் வைத்து, மறுநாள் காலையில் கழுவினால், புருவங்கள் அடர்த்தியாக வளர நல்லது.
கற்றாழை ஜெல்
கற்றாழை முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. தடிமனான புருவங்களைப் பெறுவதற்கு கற்றாழை இலையை எடுத்து, ஜெல்யை தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு, இந்த ஜெல்லை சிறிதளவு தேங்காய் எண்ணெயுடன் கலந்து, உங்கள் புருவங்களில் தடவவும். சிறிது நேரம் விட்டுவிட்டு கழுவினால் ஒரு சில் நாட்களில் புருவங்கள் வளர்வதை பார்ப்பீர்கள்.
வெங்காயம்
வெங்காயம் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. அடர்த்தியான புருவங்களைப் பெறுவதற்கான தீர்வாக, வெங்காயத்தின் சாற்றை தேனுடன் கலந்து புருவம் பகுதியில் தடவலாம்.
பழுக்காத வாழைப்பழம்
பழுக்காத வாழைப்பழத்தில் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். பழுக்காத வாழைப்பழத்தை எடுத்து, தோலை நீக்கி, வாழைப்பழத்தை மசித்து தேன் கலந்து புருவம் பகுதியில் தடவவும். சிறிது நேரம் விட்டு, பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். இதை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் அடர்த்தியான புருவங்களைப் பெறலாம்.