வெள்ளையான முகத்துடன் என்றும் இளமையாக இருக்க உதவும் Facepack: எப்படி தயாரிப்பது?
முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
சரும பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி, முகம் வெள்ளையாக இருக்க உதவும் Facepackஐ எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- முட்டை- 1
- எலுமிச்சை- 1
- தேன்- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் இதனுடன் சிறிதளவு எலுமிச்சை சேர்த்து இரண்டு பொருட்களையும் நன்கு கலந்துக் கொள்ளவும்.
இதற்கடுத்து இதனுடன் தேனையும் சேர்த்து சிறிது நேரம் நன்றாக கலந்துக் கொள்ளவும்.
பின்னர் இந்த முட்டை , தேன் மற்றும் எலுமிச்சை கலந்த பேக்கை முகத்தில் தடவவும்.
இந்த பேஸ்பேக்கை சுமார் 10 நிமிடங்களுக்கு அப்படியே விட்டுவிட்டு பின் வெதுவெதுப்பான நீரைக் கொண்டு முகத்தைக் கழுவவும்.
இதனை, வாரத்திற்கு ஒரு முறை தொடர்ந்து பயன்படுத்தி வர முகம் பொலிவுடன், என்றும் இளமையாகவும் இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |