முகத்தில் சுருக்கம் விழாமல் இளமையாக இருக்க உதவும் Facepack.., எப்படி தயாரிப்பது?
முகத்தில் சுருக்கம் விழுவது இயல்பான ஒன்று.
சுருக்கும் விழுவதற்கு அதிகமாக வெயிலில் சுற்றுவது, சருமத்தை ஒழுங்காக பராமரிப்பது பாேன்ற பல காரணங்கள் உள்ளது.
அந்தவகையில், முகத்தில் சுருக்கம் விழாமல் இளமையாக உதவும் Facepackஐ எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- முட்டை- 1
- எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன்
- தேன்- 1 ஸ்பூன்
தயாரிக்கும் முறை
முதலில் முட்டையின் வெள்ளைக்கருவை ஒரு பாத்திரத்தில் எடுத்து அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்க்கவும்.
அனைத்து பொருட்களையும் நன்கு கலந்து முகத்தை நன்கு கழுவி உலர வைக்கவும். பின்னர் இந்த கலவையை தடவவும்.
முகமூடியை 20 நிமிடங்கள் உலர விட்டு காய்ந்ததும் முகத்தை நீரில் கழுவி ஒரு துண்டுடன் உலர வைக்கவும்.
2. தேவையான பொருட்கள்
- முட்டை- 1
- எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன்
- கடலை மாவு- 1 ஸ்பூன்
தயாரிக்கும் முறை
ஒரு பாத்திரத்தில் முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து அதனுடன் கடலை மாவு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
இதை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் விட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |