முகம் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்க உதவும் பேஸ்பேக்: எப்படி தயாரிப்பது?
வெயில் காலம் என்றாலே நம் சருமத்தில் பல பிரச்சனைகள் வந்தடைகின்றன.
அதிகப்படியான சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள், வறண்ட சருமம் போன்ற பாதிப்புகளால் நமது உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.
அந்தவகையில், முகம் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்க உதவும் பேஸ்பேக்கை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- வாழைப்பழம்- 1
- தேன்- 1 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் பழுத்த வாழைப்பழம் சேர்த்து நன்கு மசித்துக்கொள்ளவும்.
பின் இதில் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு இதனை முகத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
இதற்கடுத்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
2. தேவையான பொருட்கள்
- பால்- 3 ஸ்பூன்
- தேன்- 1 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் பால் மற்றும் தேன் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவேண்டும்.
பின் அதை முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 10-15 நிமிடம் ஊற வைத்து பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
இதனை வாரத்திற்கு ஒரு முறை என தொடர்ந்து பயன்படுத்தி வர வறண்டு சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |