கொரியன் பெண்களின் அழகின் ரகசியம்.., முகப்பொலிவை அதிகரிக்க உதவும் பேஸ்பேக்
Homemade face packs for glowing skin- பொதுவாக பெண்கள் அனைவரும் முகத்தை எப்போதும் பொலிவுடன் வைத்துக்கொள்ளத்தான் விரும்புவார்கள்.
ஆனால் முகத்தில் பருக்கள் உண்டான பிறகு ஏற்படும் கரும்புள்ளிகள் முகத்தின் அழகை கெடுக்கும் விதமாக உள்ளன.
சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் நமது உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.
அந்தவகையில், கொரியன் பெண்களை போல முகம் பொலிவாக இருக்க உதவும் பேஸ்பேக்கை வீட்டிலேயே எப்படி தயாரித்து பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- முல்தானி மிட்டி- 1 ஸ்பூன்
- மோர்- தேவயான அளவு
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் முல்தானி மிட்டியுடன் மோர் சேர்த்து கலந்து கொள்ளவேண்டும்.

பின் இதனை முகத்தில் தடவி, 30 நிமிடங்கள் ஊறவைத்து, நன்கு மசாஜ் செய்து கழுவவும்.
முல்தானி மிட்டி சருமத்தில் உள்ள இறந்த செல்கள், அழுக்கு, மற்றும் பருக்களை நீக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது.
2. தேவையான பொருட்கள்
- காபி தூள்- 1 ஸ்பூன்
- சர்க்கரை- 1 ஸ்பூன்
- எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் காபி தூள், சர்க்கரை, மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
பின் இதை முகத்தில் தடவி 15 நிமிடங்களுக்கு பின் கழுவவும்.
3. தேவையான பொருட்கள்
- தக்காளி- ½
- உருளைக்கிழங்கு- ½
- கற்றாழை ஜெல்- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் தக்காளி பழம், உருளைக்கிழங்கு, மற்றும் கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
பின் இதை முகத்தில் தடவி 15 நிமிடங்களுக்கு பின் கழுவவும்.
இது முகத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்குவதோடு, நல்ல பலனையும் தருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |