முகப்பொலிவை அதிகரிக்க உதவும் இயற்கை பேஸ்பேக்.., எப்படி பயன்படுத்திவது?
பொதுவாக பெண்கள் அனைவரும் தங்களின் முகத்தை பொலிவாக வைத்துக்கொள்ளத்தான் விரும்புவார்கள்.
ஆனால் அதிகப்படியான சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.
அந்தவகையில், முகப்பொலிவை அதிகரிக்க உதவும் இயற்கை பேஸ்பேக்கை எப்படி தயாரித்து பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- மஞ்சள் தூள்- ஒரு சிட்டிகை
- தயிர்- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் மஞ்சள் தூள் மற்றும் தயிரை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

இந்த கலவையை முகத்தில், குறிப்பாக வாயைச் சுற்றியுள்ள பகுதியில் தடவி 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.
2. தேவையான பொருட்கள்
- கடலை மாவு- 2 ஸ்பூன்
- ரோஸ் வாட்டர்- 3 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
ஒரு கிண்ணத்தில் கடலை மாவை எடுத்து, அதனுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
இதை முகத்தில் தடவி நன்கு காயவிட வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.
இந்த பேக்கை வாரத்திற்கு ஒரு முறை என தொடர்ந்து பயன்படுத்தி வர முகப்பொலிவு அதிகரிக்கும்.
3. தேவையான பொருட்கள்
- பப்பாளி- சிறிதளவு
- தேன்- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் பப்பாளியை நன்கு மசித்து, அதனுடன் தேன் சேர்த்து கலக்க வேண்டும்.
இந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |