இறந்த செல்களை நீக்க உதவும் இயற்கை பேஸ்பேக்.., எப்படி பயன்படுத்துவது?
பொதுவாக அனைவரும் முகத்தினை பொலிவாக வைத்துக்கொள்ள தான் விரும்புவார்கள்.
இருப்பினும் சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் நமது உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.
அந்தவகையில், இறந்த செல்களை நீக்க உதவும் இயற்கை பேஸ்பேக்கை வீட்டிலேயே எப்படி தயாரித்து பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- காபி தூள்- 1 ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய்- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் காபி தூள் மற்றும் தேங்காய் எண்ணெயை கலந்து முகத்தில் தடவ வேண்டும்.
பின்னர் மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
2. தேவையான பொருட்கள்
- தக்காளி- 1
- சர்க்கரை- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
தக்காளியை பாதியாக நறுக்கி, சர்க்கரையில் தொட்டு, முகத்தில் மென்மையாக தேய்க்க வேண்டும்.
இதனை 5 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
3. தேவையான பொருட்கள்
- கடலை மாவு- 2 ஸ்பூன்
- பால்- 5 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் கடலை மாவுடன் பால் சேர்த்து பேஸ்ட் தயாரிக்க வேண்டும்.
இதை முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, சிறிது காய்ந்ததும் மெதுவாக தேய்த்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |