முகம் பளிச்சென்று மாற இந்த ஒரு பொருள் போதும்: எப்படி பயன்படுத்துவது?
பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள தான் நினைப்பார்கள்.
ஆனால் முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
அந்தவகையில், வீட்டிலிருந்தபடியே வறண்ட சருமத்தை மாற்றி பொலிவாகவும், மென்மையாகவும் மாற்றுவது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ரோஜா இதழ்கள்- 15
- கிளிசரின் - 2 ஸ்பூன்
- தண்ணீர் - 100ml
பயன்படுத்தும் முறை
முதலில் ஓரு ஸ்பிரே பாட்டிலில் ரோஜா இதழ்கள், கிளிசரின் மற்றும் தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.
இதனை நன்றாக குளிக்க சிறிது நேரம் அப்படியே வைக்கவும்.
பின் இதை அவ்வப்போது முகத்தில் ஸ்பிரே செய்து கைகள் கொண்டு லேசாக மசாஜ் செய்யவும்.
இதில் உள்ள ரோஜா இதழ்கள் சருமத்தின் pH அளவை சமன் செய்து, சரும துளைகளைக் குறைத்து இறுக்கமாக்க உதவுகிறது.
இதனால் சருமத்தில் படிந்துள்ள அழுக்குகள் நீங்குவதுடன் தழும்புகளும் குறையும்.
மேலும் ரோஜா இதழ்களில் இயற்கையான எண்ணெய்கள் மற்றும் சர்க்கரைகள் உள்ளதால் சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைக்கும்.
கிளிசரின் சருமத்தின் இழந்த ஈரப்பதத்தை மீட்டெடுக்க உதவுகிறது.மேலும், இது சருமத்தை மென்மையாகவும் ஈரப்பதமாகவும் வைத்திருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |